காணொளியும் தள்ளித்தனி விமர்சனத்திற்கான மறு விமர்சனம்!

காணொளியும் தள்ளித்தனி விமர்சனத்திற்கான மறு விமர்சனம்!

இந்தக் காணொளி நாம் தயாரித்ததல்ல. இந்தக் காணொளியை வைத்து வரும் கருத்து சேகரிப்பதுவும், அதிலிருந்து நாம் வருங்காலம் பற்றி எழுதுவதுமே நோக்கம். இங்கு கட்சியும் அதில் பயணிப்பவர்களும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும்தான் முன்னிலைப்பட வேண்டும். மேலைநாடுகளில் மக்களின் வாழ்வுக்கான அடிப்படைகளுக்கூடாக அவர்களுக்கான ஒட்டத்தை தனி வழியே செல்ல ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மேற்குலக அரசியலும் வளர்ந்துவரும் நாடுகளைப் போன்றே மாறிவருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா இன்று கனடாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிற நிகழ்வுகளுக்கு ஊடாக நாம் நிறைய பார்க்கலாம். இங்கு இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் விமர்சனத்திற்குட்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1996 ஆம் ஆண்டு தங்கத்துரை அய்யாவின் படுகொலை இறப்புக்குப்பின் பாராளுமன்றம் வருகிறார். அன்றிலிருந்து தொடர்ந்து பாராளுமன்றம் செல்கிறார்.

திருகோணமலை தேர்தல் மாவட்ட மக்கள் அவர் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறார்கள். பெருமையான விடயம்தான். ஆனால், இவர் தன் சூழலைப் புரிந்திருக்கிறாரா? என்பது கேள்வியாகுகிறது. இன்று தமிழர்களின் வாழ்வு நிலையில் இருந்துதான் இந்தக் கேள்வியெழுகிறது. நீங்கள் செல்வியின் பதிவுக்கு எழுதிய அங்கில மொழிப் பின்னோட்டமும் பார்த்தேன். விட்டுக்கொடுப்புகளும், சூழலைப் புரிந்து கொள்வதும் முக்கியம். இதைத்தான் தமிழரசுக்கட்சியிடமும் அதன் தலைமையிடமும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்ந்து, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் வரிசை கட்டி நிற்பதுவும் எனக்குத் தெரியும், புரியும். எல்லாவற்றுக்குமான தீர்வை தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டியது, தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையுமே. முன்மாதிரியாக இவர்கள் நடந்து கொள்ள வேண்டமா?

இவர்கள் தடம் தடம் மாத்தி எவ்வளவு காலத்திற்கு தமிழர் அரசியல் பிரச்சினையென்ற வண்டியை ஓட்டுவார்கள்? தீர்வொன்று கண்டிருந்தால் ஏன் இந்தக் காணொளி வெளிவரும்? இல்லையே? நீங்கள் பிரச்சினையை திசை திருப்ப முதுமை என்ற சொல்லைப் பயன்படுத்தாதீர்கள்? மேலும், இந்தப் பதிவை நாகரிகமாக, கெளவரமாகப் பதிவு செய்திருந்தால் அதில் பங்கு பற்றும் கருத்தாளர்களுக்கும் வாய்ப்பைக் கொடுத்திருப்பீர்கள்? இந்த மற்றவர்களுக்கு வாய்ப்பு அவரிடமுமில்லை… உங்களிடமுமில்லை. இதுதான் தமிழ்ச்சமூகம் மற்றும் தமிழ்ச் சமூக அரசியலிலும் வரலாறு முழுக்க மலிந்தும் விரவியும் கிடக்கின்றன. இந்த வாய்ப்புக் கொடுத்தல் மறுப்பென்பதுதான் உட்கட்சிப் படுகொலைகளும், சகோதர கட்சிப்படுகொலைகளும் நடப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.

Leave a Reply