காத்திருப்பு பலவிதம்…

காத்திருப்பு பலவிதம்…

எந்தவொரு சூழலிலும் காத்திருப்பு மன ரீதியாக எற்படுத்தும் உணர்வும் உணர்ச்சியும் கிட்டதட்ட ஒரே மாதிரித்தான் இருக்குமென்பது என்னுடைய அனுபவம். ஆனால், வெவ்வேறாக உணர்வதாகத்தான் வெளிப்படுவதாக கூறுபவர்களும் உண்டு. காத்திருப்புக்குரிய காரணமும் அதற்கான வேறாக இருப்பதால் வேறாக மன வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். இந்தகீரைத் தோட்டத்தின் அறுவடையில் ஈடுபடும் பொழுது ஊர் ஞாபகம் வந்து மனசை என்னவோ செய்கிறது.

திரைப்படங்களில் வரும் காட்சிகள் போலவே அந்த செம்மண் பொழுதியும், மாடுகளின் குழம்படிச் சத்தமும், செம்மறி பட்டி ஆடுகளின் குரல்களும் தொலைந்துபோன வாழ்வைப் பற்றி நெஞ்சில் கணக்கச் செய்கிறது.

மனிதர்களாக இருந்தும் வேறுபாடுகளை சுமந்த வாழ்வின் மனசு பற்றி இயந்திரங்களோடான வாழ்வும், சீமெந்துக் கட்டிட வாழ்விடமும் இந்த சிறு நிலத்துண்டு விவசாயமும் குத்திக் காட்டுவதாக கருதுகிறேன். தொலைந்ததை தேடி பின்னோக்கி சென்று விட முடியுமா? இருப்பதில் திருப்தியைத்தேடுவதே நகரப் புலப்பெயர் வாழ்வாகும்.

Leave a Reply