தோழமை அரசியல்

தோழமை அரசியலில் தொலைந்துபோகும் உழைப்புகளும் கெளரவங்களும்!

அரசியலென்பது அதிகார மாற்றத்திற்கானது என்பதை அழகாக மாய வார்த்தைகளுக்குக் ஊடாக உணர்ச்சியூட்டும் சொற்களின் மீதான வன்மமும் விரோதமும் குரோதமும் தடவித் துரோகக் குருதியில் நனைத்தெய்யும் அம்புகளாக தலைமைகளால் உறுப்பினர்கள் பயன்படுத்தப்படும் தமிழ் அரசியல்ச் சூழலில் சக தோழனின் உழைப்பும் தியாகங்களும் போராட்ட வாழ்வும் கெளரவமற்று உதாசீனப்படுவதைப் பார்த்துப் பொறுத்துப் போவதா? பொங்கியெழுவதா? என்ற கேள்வியை விட்டெரிந்து சென்றிருக்கிறது மிக அண்மையில் நடந்ததொரு சம்பவம்.

1995 ஆம் ஆண்டளவில், ஐரோப்பிய புலப்பெயர் தமிழ்ச்சூழலில் மாற்றுக்கருத்து நிலைக்காரர்களை தமிழீழத்தேசியம் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த சூழலில் தன்னந்தனியே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்காக, பிரான்சில் சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்த பயங்கரம் நிறைந்த தருணங்களிலும் வேலை செய்த தோழர் மாட்டீன் ஜெயா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜெர்மன் பிராந்திய அமைப்பாளர். இன்றுவரைக்கும் அவர் அக்கட்சித் தொண்டனாக, தலைமைக்கு விசுவாசியாக, கட்டுப்பட்டவனாக தோழமையின் தோழனாக வாழ்பவன். சோத்துக்கும் வாழ்வுக்கும் போராட்டமான காலத்தில் இயக்கத்திற்காக புழுதியிலும் முட்க்கம்பி வேலிக்கிடையில் உயிர் காக்கும் தோழமையின் மருத்துவனாக விடுதலை வேள்வியில் திசை காட்டியாக அவனிருந்தான்.

இயக்கம் கட்சியாக மாறி காலமும் ஒட்டமாய் நடை நடந்துபோக தோழமையின் அர்த்தமும் காகிதப்பூக் காட்சிகளாய் மாறி இரவும் இருட்டுக்குள் ஜன்னல் வைத்து இறுக மூடிக் கொண்டது. மானாட மயிலாட மதுவும் அவனோட ஆட மக்கள் மன்றமும் தலைகீழ் கால் மேலென தொலைந்தது வார்த்தைகள் தொலைபேசியில் ஜெர்மன் பிராந்தியம் நோக்கி பண்டாரவன்னியன் தம்பி கட்டப்பொம்மன் சிவாஜியாய் கந்தலாய் கிழிந்தது வார்த்தைகள் அர்த்த இராத்திரியில் கொலை மிரட்டலாய் வெடித்து சிதறியது. கட்சியில் உறுப்பினனின் வரலாற்றுப் பின்னணியை உற்றுநோக்கா போக்கு மேலிட அமைப்புக் கட்டுமானம் சேதாரமாகி நிற்பதை அந்த மேதகுவின் சொற்கள் எங்கள் நெஞ்சங்களையும் கேட்ட மாத்திரத்தில் சூடாக்கிச் சென்றது.

கட்சிக் கட்டுமானங்களைக் கட்டுவதுமல்ல சமூகச் சறுக்கல்களையும் சீர்செய்வது தோழமையின் உன்னதமான கடமையென வன்னி மண்ணில் தோழர்களுக்காக ‘தோழமை பண்ணை’ தோழர் மாட்டீன் ஜெயா கண்ட கனவு நனவாகிவரும் தருணம் இது, அந்தப் பண்ணையென்பது தோழமையின் தோளோடு குடும்பம் தாங்கி நிற்கும் அந்தப்பெண் தோழமைகளின் வாழ்வு சுமை அகற்றிட அவன் மனதில் எழுந்த சிந்தனை அது. ஆணும் பெண்ணும் சரிசமமென எண்ணிடும் தோழமையின் கட்சி இவன் பெண் வீதிக்கு அந்த மேதகு கெளரவ மன்றக் கட்சி சக உறுப்பினன் தவறும் வார்த்தைகள் கொண்டு இழுத்து வரப்படுகிறாள். இவனுக்கும் இவன் பெண் இணையர்க்கும் மரணம் செய்ய அந்த மேதகு சவப்பெட்டி தயார் செய்கிறனாம். காலம் செய்த கோலமது மரபும் பண்பாடும் மீறிடும் இச்செயல் அறிந்தும் தலைமை மழைத்துளி விழும் எருமை மாடாய் எந்த மனச்சலனமுமின்றி பெண்ணின் மன உணர்வு புரிந்திலான் பார் ஆளும் சக்கரவர்த்திக் கனவில் தோழமையின் தோலுரித்து தன் காலுக்குச் செருப்புச் செய்கிறான். தீர விசாரித்து தீர்ப்புச் சொல்லிட திரணியற்று திரை மறைவில் பாரதியின் புதுமைப்பெண் கவிதைக்கு அர்த்தம் தேடுகிறான்.

தோழர் மாட்டீன் ஜெயா, எங்களுடன் தீவகச் சூழலையும் தாண்டி இன்றும் தோழமையுடன் சிநேகம் வைத்திருப்பவன், குடும்ப உறவாகவும் மலர்ந்து கருத்து, நிலைப்பாடு ரீதியாக முரண்நிலையிலும் தோழைமையும் அதனூடாக சினேகமும் கொண்டு வாழ்பவன், நாங்கள் அக்கட்சியில் இல்லையென்றாலும் அக்கட்சிக்கான உழைப்பின் மீது மதிப்பும் கெளரவமும் கொண்ட பண்பாளன். இன்று அக்கட்சியில் காலமென்னும் வருடங்கள் எண்ணிடவும் உழைப்பும் அனுபவத்தாலும் தமிழ் மொழி மீதான ஆளுமையும் பிறமொழித் தேர்ச்சியும் நிர்வாகத்திறன் கொண்ட சிற்பியுமாக தகுதியும் திறமையும் மனோதிடமும் கொண்ட தலைமைக்குரிய தகுதிநிலைக்காரன். மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் அக்கட்சியின் முதலைமைச்சர் வேட்பாளராக களம் நிறுத்தக்கூடிய மக்கள் சிந்தனையாளன். அவனின் மக்களுக்கான சிந்தளையும், உழைப்பென்பதற்கு 40 வருட தமிழ் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

Leave a Reply