• May 22, 2023

முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும்; அதில் முளைக்கும் EPDP தலைமையின் அரசியல் சாணக்கிய வியூகம்!! மறதியே எம் சமூகத்தின் சாபக்கேடு!!!

பொறுப்புக்கூறல்: Nixson Baskaran Umapathysivam 

//………………………………………….
சத்தியமூர்த்தி நியமனம் – மாகாணசபை அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாடு!
……………………………………………..//
– வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சாடல்!

இந்த தவராசா சின்னத்துரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் position எப்படி கிடைக்கிறது என்பது மிக முக்கியமான வினாவாகும்.

இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி/United People’s Freedom Alliance என்னும் அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பு பற்றிப் பேசியாக வேண்டியிருக்கிறது. இக்கூட்டமைப்புக்கூடாகவே இந்த வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி position 2013 இல் உருவாகுகிறது. ஆகவே, கூட்டணி பற்றிய உரையாடல் இக்கட்டுரைக்கு அவசியமாகுகிறது என்பதைச் சொல்கிறோம்.

இக்கூட்டணியானது;
1 – இலங்கை சுதந்திரக் கட்சி,
2 – மக்கள் விடுதலை முன்னணி,
3 – இலங்கை மக்கள் கட்சி,
4 – முஸ்லிம் தேசிய ஐக்கிய முன்னணி,
5 – மக்கள் ஐக்கிய முன்னணி,
6 – சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி,
7 – தேச விமுக்தி ஜனதா கட்சி ஆகிய கட்சிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்படுகிறது.

பின்னாளில் இக்கூட்டணியில்;
1 – இலங்கை சுதந்திரக் கட்சி
2 – இலங்கை மக்கள் கட்சி
3 – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
4 – இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
5 – தேச விமுக்தி ஜனதா பக்சய
6 – சனநாயக இடது முன்னணி
7 – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
8 – ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்
9 – இலங்கை லிபரல் கட்சி
10 – மகாஜன எக்சத் பெரமுன
11 – தேசிய சுதந்திர முன்னணி
12 – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
13 – மலையக மக்கள் முன்னணி
14 – சிறீ-டெலோ ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.

இந்தக்கூட்டணியில் வெற்றிலைச் சின்னத்தில் 2013 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் EPDP, இக்கூட்டணிக்கு இத்தேர்தலில் இங்கு தலைமைப் பாத்திரம் வகிக்கிறது.

இக்கூட்டணி Chandrika Kumarathunga வினால் 20 January 2004 இல் உருவாக்கப்படுகிறது. இதனுடைய ஆயுள் காலம் 9 December 2019 ஆக இருந்து விடுகிறது.

இந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் Maithripala Sirisena, இக்கூட்டணிக்குத் தலைவராகவும், ஜனாதிபதியாக மகிந்தா ராஜபக்சாவும் இருக்கிறார்கள். இதன் செயலாளராக Thilanga Sumathipala வும்  இருக்கிறார்.

வடக்கு மாகாண சபை மொத்தம் 38 ஆசனங்களைக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலின் பொழுது Registered Electors 719, 477 ஆகவும், Total Votes Polled 485, 813 ஆகவும் இருக்கிறது. இந்தத் தொகையானது Registered Electors ல் 67.52% ஆகவும் இருந்து விடுகிறது.

இத்தேர்தலில் Total Valid Votes 450, 574 ஆகும். இந்தத் தொகையானது, Total Votes Polled இல் 92.75% ஆகவும், Registered Electors இல் 62.63% ஆகவும் இருக்கிறது.

இத்தேர்தலில் Rejected Votes 35, 239 ஆகும். இத்தொகையானது, Total Votes Polled இல் 7.25% ஆகவும், Registered Electors இல் 4.90% ஆகவும் இருக்கிறது.

பொதுவாகத் தேர்தல்களில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளும் மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

இத்தேர்தலில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி 233, 664 வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வராமல் இருந்திருக்கிறார்கள்.

இத்தொகையானது, Registered Electors இல் 32.48% ஆகவும், Total Votes Polled இல் 48.10% ஆகவும் இருக்கிறது.

இத்தொகையானதின் வேறுபாடு என்பது இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்குமான ஒவ்வாமைச் சூழலை வெளிப்படுத்துகிறதென எடுத்துக் கொள்ளலாம்.

வவுனியா மாவட்டத்தில் Total Votes Polled 66, 781 ஆகவும், அது Registered Electors இன் 70.56% ஆகவும் இருக்கிறது. இதில் 41, 225 வாக்குகளை ITAK (TNA) பெற்று 4 ஆசனங்களையும், 16, 633 வாக்குகளை UPFA பெற்று 2 ஆசனங்களையும் பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் Total Votes Polled 38, 802 ஆகவும், அது Registered Electors இன் 72.28 ஆகவும் இருக்கிறது. இதில் 28, 266 வாக்குகளை ITAK (TNA) பெற்று 4 ஆசனங்களையும், 7, 209 வாக்குகளை UPFA பெற்று 1 ஆசனங்களையும் பெறுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் Total Votes Polled 50, 194 ஆகவும், அது Registered Electors இன் 73.17% ஆகவும் இருக்கிறது. இதில் 37, 079 வாக்குகளை ITAK (TNA) பெற்று 3 ஆசனங்களையும், 7, 897 வாக்குகளை UPFA பெற்று ஒரு ஆசனத்தையும் பெறுகிறது.

மன்னார் மாவட்டத்தில் Total Votes Polled 56, 215 ஆகவும், அது Registered Electors இன் 74.22% ஆகவும் இருக்கிறது. இதில் 33, 118 வாக்குகளை ITAK (TNA) பெற்று 3 ஆசனங்களையும், 15, 104 வாக்குகளை UPFA பெற்று 1 ஆசனங்களையும், 4, 571 வாக்குகளை SLMC (Sri Lanka Muslim Congress) பெற்று ஒரு ஆசனத்தையும்  பெறுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் Total Votes Polled 273, 821 ஆகவும், அது Registered Electors இன் 64.15% ஆகவும் இருக்கிறது. இதில் 213, 907 வாக்குகளை ITAK (TNA) பெற்று 14 ஆசனங்களையும், 35, 995 வாக்குகளை UPFA பெற்று இரு ஆசனங்களையும் பெறுகிறது.

பொதுவாக, கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5% க்கும் 10% க்கும் இடைப்பட்டதாக அமைந்திருக்கிறது.

இதில் மேலிருந்து கீழ் நோக்கிய வரிசைப்படுத்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் கிளிநொச்சி மாவட்டம் 9.59&, யாழ்ப்பாணம் மாவட்டம் 7.41%, முல்லைத்தீவு மாவட்டம் 7.27%, வவுனியா மாவட்டம் 6.61%,
மன்னார் மாவட்டம் 5.32% ஆகவும் இருக்கின்றன.

இந்த வீகிதமென்பது வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் தொகையில் இருந்து பெறப்பட்டதாகும்.

அந்த வகையில் வாக்களிக்க வந்தோரின் வீகிதமும் இங்கு முக்கிய கவனிப்பாகும். அதில் வடக்கு மாகாண அளவில் 67.52% ஆக இருக்கிறது.  இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் தொகையில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

இதில் 32.48% வாக்குச் சாவடிக்கு வராத வாக்காளர்கள் தொகையாக இருக்கிறது. இந்தத் தொகையானது வழமையானதாகவும் அதற்கான காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் கட்சிகளின் அரசியலையும் நிர்வாகச் சூழலிலும் கேள்வியெழுப்பும் விடயமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில், ITAK(TNA) 353, 595 வாக்குகளைப் (78.48%) பெற்று 30 ஆசனங்களையும், UPFA 82, 838 வாக்குகளைப் (18.38%) பெற்று 7 ஆசனங்களையும், SLMC 6761 வாக்குகளைப் (1.50%) பெற்று ஒரு ஆசனத்தையும் பெறுகின்றன.

இந்நிலையில் ITAK(TNA) ஆளுங்கட்சியாகவும், UPFA எதிர்க்கட்சியாகவும் வடக்கு மாகாண சபை ஆளுமை அதிகாரச் சூழலுக்குள் வருகின்றன.

UPFA இன் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அக்கட்சிக்குக் கிடைத்த 7 ஆசனங்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் EPDP இல் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவாகியிருந்த கமலேந்திரன் கந்தசாமி நியமிக்கப்படுகிறார்.

இத்தேர்தலில், EPDP சார்பில் இருவர் தெரிவாகுகிறார்; ஒருவர் கமலேந்திரன் கந்தசாமி, மற்றவர் தவநாதன் ஆகும்.

UPFA கூட்டணிக்குள் போட்டியிட்ட SLFP ( ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) சார்பில் போட்டியிட்ட அங்கையன் இராமநாதனும் போட்டியிட்டுத் தெரிவாகியிருந்தார்.

ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சாவின் தீர்மானத்தின்படி அதிக கூடிய விருப்பு வாக்கு பெறுபவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் 15.674 விருப்பு வாக்குகளைப் பெறும் கமலேந்திரன் கந்தசாமி எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுகிறார்.

அங்கையன் இராமநாதனும் இந்த எதிர்க்கட்சித்தலைவருக்காக முயற்சி செய்திருக்கிறார்; அவருக்கான விருப்பு வாக்கு பத்தாயிரம் plus ஆக இருந்ததினால் இப்போட்டியில் பின் தங்கி விடுகிறார்.

இந்த எதிர்க்கட்சித்தலைவர் பதவியேற்பு 28 Octobet 2013 இல் அன்றைய ஜனாதிபதி மஹிந்தா இராஜபக்சா முன்னிலையில் கொழும்பில் நடைபெற்றிருந்தது.

ஒரு வருட காலம் கடந்த நிலையில், அன்றைய UPFA எதிர்க்கட்சித் தலைவரின் அசாத்திய சூழல் காரணமாக தவராசா சின்னத்துரை, EPDP இனால் UPFA செயலாளருக்கு அப்பதவிக்கு மாற்றீடு செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறார். அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு தவராசா சின்னத்துரையும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராகுகிறார்.

தவராசா சின்னத்துரை, EPDP சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும் விருப்பு வாக்குகளில் ஏழாயிரம் plus ஆக இருந்து விடுகிறது. இச்சூழலில் EPDP தலைமையின் சுய விருப்பம் சார்ந்தே இவரது நியமனம் நடப்பதைக் கவனிக்கலாம்.

தமிழரசுக்கட்சி (ITAK) இன் தலைமையில் போட்டியிட்ட EPRLF, PLOTE, TELO மற்றும் ITAK ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பானது ‘தமிழ்தேசியக்கூட்டமைப்பு’ (TNA) ஆகும்.

இந்தக் கூட்டமைப்பின் முதலமைச்சராக, முன்னாள் நீதியரசர் சி.விக்கினேஸ்வரன் பதவியேற்றிருந்தார். பின்னாளில் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடென்பது அடுத்து நடத்தப்பட வேண்டிய வடக்கு மாகாண சபைத் தேர்தல் தள்ளிப் போகுமளவுக்கு விவகாரமாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியானதொரு முரண்பாட்டுச் சூழ்நிலை என்பது வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சின்னத்துரைக்கும் EPDPத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்டிருந்தது.

இச்சூழலில் EPDPத் தலைமை, தவராசா சின்னத்துரையை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மாற்ற முயற்சி எடுத்த பொழுது UPFA ஏற்றுக் கொள்ளாத நிலையில் EPDPத் தலைமை தன் கையைப் பிசைந்து கொண்டதை நினைவு கொள்ளலாம்.

இந்த EPDP தலைமைக்கும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சின்னத்துரைக்குமான முரண்பாட்டுச் சூழல் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் மூன்று வருடங்கள் நீடித்திருந்தது.

அப்பொழுது வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சின்னத்துரை, EPDP தலைமைக்கெதிராக செயல்பட்டதுடன் பொதுவெளி அச்சு ஊடகங்களில் எதிர்ப்பிரச்சாரம் செய்ததையும் காணலாம். அதே சமகாலத்திவ் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் இணைவு அரசியலையும் மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னான காலத்தில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா சின்னத்துரை, இலங்கையில் இருப்பதற்கு பாதுகாப்பு இல்லாத காரணங்களினால் பிரிட்டிஷ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்.

பின்னாளில், EPDP க்குள் தன்னுடன் சேர்ந்து EPDP தலைமைக்கான ஆலோசகராக கலாநிதி விக்கினேஸ்வரனுடன் இணைந்து சில அரசியல் இருப்பு முயற்சிகளை தவராசா சின்னத்துரை எடுத்திருந்தார்.

அது ஏதுவும் கை கூடாதவகையில் மீண்டும் EPDP தலைமையோடு ஏற்பட்ட சமரச முயற்சிக்குப்பின், முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா சின்னத்துரை இலங்கைத் திரும்பியிருக்கிறார்.

EPDP தலைமையின் ஆளுந்தரப்பில் அங்கம் வகித்து அபிவிருத்தியையும், ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ கோஷத்திலும் பல தரப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை மத்திய அரசு திரும்பப் பெறுகிற பொழுது மெளனமாகவும் ஆதரவாகவும் செயல்ப்பட்டதைக் காணலாம்.

இன்று தையிட்டி பெளத்த விகாரை விவகாரம் வரை ஒவ்வொரு தமிழ்க்கட்சிகளும் தங்களது தேர்தலுக்கான அரசியலுக்காக முன்னெடுப்பதில் EPDP இன் தேர்தல் தேவைக்காகவே இந்த முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சின்னத்துரை, மாகாண சபை அதிகாரம் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.
May 22, 2023

Leave a Reply