சின்ன வேலை…

சின்ன வேலை…

மனசோடு நிறைவான நிகழ்வு!இந்த தோட்டத்திற்கான படலையை மீள் உருவாக்கம் செய்து கொடுத்திருந்தேன். என் மனைவியின் சொல்லுக்காக இவ்வேலையை செய்து கொடுக்க ஒப்புக்கொண்டேன். அவர்களது சிறு தோட்டத்திற்கான பாதுகாப்பிற்காக அவர்கள் பல தடவை கேட்டதற்குப் பின்தான் இவ்வேலையை செய்து கொடுக்க முடிந்தது. இங்கு இந்தவிதமான சிறு தோட்டம் உள ரீதியான அமைதியைக் கொடுக்கிறது. என்னிடமும் சிறு கீரைத் தோட்டம் இருக்கிறது. என் மனைவியின் முக மலர்ச்சியை அந்தக் கீரையின் வளர்ச்சியை பார்க்கும் பொழுது பார்க்க வேண்டியது. ஆனால், எனக்கான நேரத்தில் இடம் பிடிக்கத் தொடங்கியது வாசிப்பு. என் வயசின் ஏற்றமும் அனுபவமும் வாசிப்பில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அது என் வாழ்வுக்கான தனித்த பயணத்தைக் கொடுத்திருக்கிறது.

Leave a Reply