Sham என்ற நண்பனின் வினாவும் என் மனதின் குரலும்!

Sham என்ற நண்பனின் வினாவும் என் மனதின் குரலும்!

பார்த்திருக்கிறேன். அவரோடு மிக சொற்ப காலம் வாழ்ந்திருக்கிறேன். முன்மாதிரியென, இலக்கு நோக்கிய பயணத்தின் மீதான வலிமையும், விடாமுயற்சியும் அதில் கண்டேன். வெற்றி என்பதும் பொதுவாழ்வும் எங்கே? பொதுமையற்று அவரில் போச்சோ… அன்றில் அக்கணமே, முதலாளியாய், மேட்டுக்குடியாய், கல்வீட்டுக்காரனாய், சர்வ அதிகாரம் பொருந்தியவராய், தானே எல்லாமென இறுமாப்பு கொண்ட மனிதனாய், பாசறை வாழ்வின் தோழமை முறை மாறி விசுவாசம் அடிமைத்தனம் கட்டுக்குள் ‘மக்கள் அரசியல்’ பயணமாவதைப் புரிதல் கண்டேன் நண்பா!

வெட்கம்! என்னைக் கொல்லுது! கண நேரமும் மரண வலியில் என் மனம் துடிக்கிறது நண்பா! எங்கெங்கும் இரத்தக்காட்டேறி குருதி முகம் கொண்டு தூரத்துவதாக கனவுக்குள் தூக்கம் தொலைகிறேன் நண்பா!

என் வாழ்வும் என் உயிரும் பெரிதென இருத்தல் நோக்கி தன்னந்தனியே ஓடினேன்… ஓடினேன்… அடிவானம் வானம்போலே வாழ்வின் தூரமும் நீண்டே போனது. திருப்பிப் பார்த்தேன்… தீர்வும் விடையும் நான் ஒட்டம் தொடங்கிய இடத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டேன் நண்பா! எனக்கு இலக்கும் எல்லாமே இலகுவாகப் போச்சு. இப்பொழுது அப்படியான ஒருவரை உருவாக்க வேண்டும். தேடுகிறோம்.

வாழ்க்கைக்குள் வாழ்வின் அர்த்தங்களைப் புரிய வைத்தது, துவண்டு உயிரற்றவனாய் உட்காரும் பொழுதும் எழுந்திடு என என்னை உயிர்ப்போடு வைத்திருப்பவன் என் மூத்தவன்! அவனின் வாழ்வோடு போராட்டத்தின் சிறு காணொளி பின் இணைப்பாகக் கொடுக்கிறேன். யாரால்… யாருக்காக அவன் வாழ்வுக்காக போராடுகிறான்? மரணம் ஒருநாள் வலியும் நாளாக நாளாக துயரமும் காணாமல் போய்விடும் நண்பா! சுமையாய் அதை சுகமாய் சுமப்பவனாய் கால் நூற்றாண்டு காலப்பயணம் தந்த அனுபவமே நண்பா! வாழ்வின் முடிவில் என் மனச்சிரிப்பில் என் மரணம் நிகழும் அதுதான் நான் காணும் ஞானமாகும் நண்பா!

20 வருடங்களுக்குப்பின் தோழன்… இல்லை நண்பன் என்பதே எம் வாழ்க்கையின் வாழ்தலுக்குச் சரியாக இருக்க முடியும்… ஒரு நாள் தொடர்பில், கதையாடலில்..இவ்வளவு காலமும் எங்கிருந்தாய்? என்ற வினாவோடு தன்னை உயரத்தூக்கிப் பிடித்தான். என் மனம் வலி கண்டது. காலத்தின் கணக்கில் மகனின் கணக்கைச் சரி செய்ய, விடியல் பொழுதில் மரணம் உனக்கு இன்றென எமனுடன் மல்லுக்கட்டிய கணமாய் கண்ணீராய் கரைத்த கதைக்கு முன்னுரை இல்லாமல் முடிவுரைக்கு முற்றுப்புள்ளி தேடுகிறேன்.

Leave a Reply