கட்சி அரசியலும், அதன் கடமைகளும்; உங்களுக்காகவே நாம் பேசுகிறோம்?

கட்சி அரசியலும், அதன் கடமைகளும்; உங்களுக்காகவே நாம் பேசுகிறோம்?

இங்கு வயதல்ல முக்கியம், அந்தப் பெண் தன் அரசியல் வாழ்வை முறைப்படி, கட்சி உறுப்பினராக சிறு வயதில் தன்னை இணைத்துக் கொள்கிறார்கள். கட்சி வேலைத்திட்டங்களுக்கு ஊடாக தன்னை செழுமைப்படுத்திக் கொள்வதும், படிநிலையில் கட்சிப் பொறுப்புகளில் இருத்தலும், அந்தக் கட்சியும்; கட்டுமானமும், சித்தாங்களும் கோட்பாடுகளுக்கு அமைய வழி நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே இது சாத்தியப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒன்றும் நிகழ முடியாத விடயமல்ல. இரு பகுதியினரும்; மக்களும் அவர்களுக்கான அரசியல்க்கட்சிகளும் தங்களுக்கான அரசியல் பயண ஒழுங்கில் சரியாக தங்களை வடிவமைத்துக் கொண்டால் இந்நிகழ்வுகள் எங்கும் சாத்தியமாகும்.

இதைவிடுத்து, வியாபார நிலையங்களில் தான் ஊதியத்திற்காக ஓர் ஊழியன் வேலை வழங்குபவனுக்காக அந்த வியாபார நிலையத்தின் விதிகளுக்கு மட்டும் உட்பட்டு, மெளனமாக, பூம் பூம் மாடு மாதிரி வேலை செய்ய வேண்டும். அடிக்கடி முதலாளியை, ‘நடமாடும் M.G.R’, ‘தந்தை’ என்ற குளிர்படுத்தும் அடைமொழி வசனங்களை அள்ளிவிட வேண்டும். அப்பத்தான் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அதே மாதிரி முதலாளிக்காக அந்த நிறுவனத்தை வளர்க்க முற்படும் நெருக்கமானவர்களுக்கும் சேர்த்து ‘வணக்கம்’ வைக்க வேண்டும். இது அந்த ஊழியனின் தனிப்பட்ட, வியாபார நிலைய பொருளாதாரம் சம்பந்தப்பட்டது.

கட்சிகளும் கீழிலிருந்து மேல் நோக்கிய உறுப்பினர்களின் வளர்ச்சியை கட்சிக்குரிய நிர்வாக விதிமுறைக்குட்பட்டு, உறுப்பினர்களின் வேலைத்திட்டங்களின் செயல்பாடுகள் வழியாக வெளிப்படும் ஆளுமையின் வெளிபாட்டினை முன்னிறுத்த முற்படும் பொழுது புதுப்புது ஆளுமை முகங்களை நாங்களும், எங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் மக்களுக்கான அதிகாரப் பொறுப்புகளில் காணலாம்.

கட்சிகளில் வயதானவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள் / குறிப்பிடுபவர்கள்; நெல்சன் மண்டேலா போன்று மக்களுக்கான நிர்வாக பொறுப்பை பார்க்க முயல வேண்டும். இளையோர் மீது நம்பிக்கைகளை கொண்டு, கட்சிகளை செழுமைப்படுத்தும் செயல்திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர்களாகவும், மக்கள் போற்றும் மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்தல் என்பதுதான் அவர்களது அரசியல் வாழ்க்கையின் உச்சமாகும்.

அரசியல் என்பது வாழ்வுக்கானது, அதற்கான பொருளாதாரத்தை கட்டமைத்தலும் காப்பாற்றுவதும் ஒழுங்குப்படுத்துவது என்பதனூடாக, குடும்பங்களை பாராமரிப்பதுவும், அதற்குடாக தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் அல்லது ஆதரவு நிலைக்கட்சிக்கும் தன்னால் இயன்ற நிதியை வழங்குவதும், அதைச் சரியாக பாராமரிப்பதுதான் கட்சியின் கடமையாகும். நாங்களும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிப்பதுதான் எமக்கான குடும்பக் கடமையாகும். இதற்காகத்தானே அரசியல் செய்கிறோம். மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டுமென்கிறோம். நிம்மதியான சகவாழ்வு கூவிக் கூவி தொண்டைத் தண்ணியும் வத்துது. அந்த இளம் பெண் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.

வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெண் முதலமைச்சரைக் கொண்டு வர முயற்சிப்போம். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆளுமைமிக்க, ஆயுதப் போராட்ட சூழலில் இருந்து இன்று வரைக்கும் குடும்பமும் அரசியலுமாக பயணிக்கும் பெண் ஒருவரை நண்பர் ஒருவரின் முகநூல் பதிவில் பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள்!

Leave a Reply