சமூகம் மீதான கவலை கொள்ளுதல்

சமூகம் மீதான கவலை கொள்ளுதல்

சமூகம் மீதான கவலை கொள்ளுதல் என்பது மனதுக்கான தீர்வாக மட்டுமே இருக்கிறது?சமூகம் அப்படியேதான் இருக்கிறது. சமூகப் பரப்பில் இருந்து படைப்பாளர்களாக, அரசியலாளராக, மக்கள் சேவையாளராக, சமூக சேவையாளர்களாக, கல்வி கற்றவர்களாக, பகுத்தறிவாளராக, சித்தாந்தவாதியாக, பெண்ணீயவாதியாக, சாதீய ஒழிப்பாளராக, குழந்தைகள் நலவாதியாக… இப்படி எண்ணற்ற சொற்களுக்கூடாக மேலெழுந்தவர்கள்தான் சிந்திக்க வேண்டும். இவர்கள் தங்களை மீள் பரிசோதனை செய்வதன் ஊடாக மட்டுமே சமூகமென்பது மாற்றமடையும். அந்த சம்பவம் எப்பொழுது? எங்கு நிகழ்ந்திருக்கிறது? விடை தெரிந்திருந்தும் கடந்து செல்வதுதான் சமூகம் மீதான குற்றச்சாட்டு. சமூகம் எப்பொழுது கேட்டு, நாம் செய்திருக்கிறோம்? நாம் நினைக்கிறோம்… செய்கிறோம்.

ஆனால், நாம் செய்வதை மற்றவர்கள் கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இது ஒருவிதமான அடிமைத்தன, சர்வாதிகாரமான, சனநாயக மறுப்பான எண்ணங்களாகும். இதனூடாக பயணித்து நாம் வந்தடைந்த புள்ளி பற்றித்தான் நாம் கவலைப்படுகிறோம். ஆனால், நாம் பயணித்த எண்ணங்களை, தோல்வி கண்ட வழிகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. கூட்டு வாழ்வுக்கும், கூடி சிந்திப்பதற்கும் அதில் கூட்டு செயலைச் செய்வதற்கும் நாம் தயாராக இல்லாத பொழுது சமூகம் எப்படி மாறும்? தனிமனித சித்தாந்தத்தையும், விழுமியங்களையும் நாம் துறக்கும் பொழுதுதான் ‘பகிர்தல்’ என்பதனூடாக, சமூக செயல்பாட்டிற்கான தளம் பிறக்கிறது. இதுதான் சமூகத்திற்கான வெற்றியாக மாற்றமடையும் அல்லது தனிமனித வெற்றிகள் சமூக வெற்றியாகக் காண்பிக்கப்படும், காட்சிப்படுத்தப்படுகிறது.

புகைப்படம்:Sri Haran Pasupathy

Leave a Reply