• June 9, 2023

‘தமிழீழப்போரின் இறுதிக்காட்சிகள்’

By: Nixson Baskaran Umapathysivam

‘ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்’ என்ற தலைப்பில், சிவராசா கருணாகரன் எழுதிய பதிவைப் படித்து முடிக்க முடிந்தது.

‘தமிழீழப்போரின் இறுதிக்காட்சிகள்’ என்பதே சரியாக இருந்து விடுவதைக் கட்டுரையாளர் சிவராசா கருணாகரன், தன் கட்டுரையில் பல இடங்களில் கள நிலவரத்தோடு மட்டுமல்லாமல் தன் புரிதலில் கட்டுரை மையப் பொருளைப் பற்றியும் சொல்லி வருகிறார்.

இன்றைவரைக்கும் ‘ஈழம்’ மற்றும் ‘தமிழீழம்’ என்ற அரசியல் சொல் பதத்திற்குமான பயன்படுத்தலிலுள்ள அரசியலைக் கவனிக்கக் கட்டுரையாளர்கள் தவறுவதாகக் கருதுகிறேன்.

கட்டுரையின் மையப்பொருளும் எவ்வாறு தான் இராணுவப்பொறிமுறையில் வைத்திருந்த நம்பிக்கையைக் கடைசித் தருணத்தில் தன்னை நெருக்கும் நெருக்கடிகளில் இருந்து புரிந்து கொள்வதுபோலவே தமிழீழக் கருத்தியலாளர்களும் அவரைப்போலவே தம்மை நெருக்கும் நெருக்கடிகளால் புரிவதாகத் தெரிகிறது.

இன்றைக்கு எல்லாமே சம்பவங்களாகிப் போயின என்பதும் இலங்கைத்தமிழர்களைச் சுற்றி நெருக்கும் நெருக்கடிகளாகவே கட்டமைக்கும் அரசியல் முட்க்கம்பி வேலியாகும்.

//……………………………………………………………..

உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.

மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.

“வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்“

………………………………………………………………………//

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid08bVzySsfU49VkxcMQHAQ94nc6MpGKZNg6KMpviuTqtxLQpderBHWjt9z5qAu6GnBl&id=100013809546793&mibextid=Nif5oz

Leave a Reply