தேர்தல் என்பதொன்றே மக்கள் ஆணையைப் பெறும் களமாகும்?

அனைத்து அதிகாரமும் ஒரு புள்ளியில் ஒருங்கே குவியம் கொண்டதுதான் இலங்கை சனாதிபதி பதவியாகும். அது இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்கிற கோசத்தை, அந்த அதிகாரக் கதிரையை எட்டுவதற்காக உயர்த்திப் பிடிப்பதையே நாம் காண்கிறோம். மாறாக, அப்புள்ளியை எட்டுவதும் உடனே இல்லாதொழிப்பதற்கான மனிதனைத் தேட முடியாதவர்களாக எம் அரசியலும் சித்தாவும் அது சார் மனசும் இருந்து விடுகிறது. இங்கு அந்தக் கதிரை என்ன செய்தது? மாறாக, அதில் உட்கார்ந்தவர்கள் செய்ததும் நடந்து கொண்டதும்தான் இங்கு வரலாறாக வேதனையில், துயரத்தில் நனைந்திருக்கிறது.

//…13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு முன்னோக்கி நகர்வதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை…//

யார் சொன்னதென்பதைவிட எந்தத் தருணத்தில் சொல்லப்பட்டதுதான் மிக முக்கியம். அது யார் காதில் விழ வேண்டுமென்றதும் கவனம் கொள்ளப்பட வேண்டும்? அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்கின்ற பொழுது வளைவொன்றின் நிகழ்வின் பொழுது அந்த நபர் காதில் சொல்லியிருக்கலாம்? இது அவருக்கனதல்ல என்பது தெளிவாகுகிறது.

1987 ஆம் ஆண்டில், இந்திய பிராந்திய வல்லமையின்  with involvement இல் இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கான, இலங்கைக்கான ஓர் தீர்வு, இந்த 35 வருடங்களில் முழுமையாக அமல்ப்படுத்த முடியாமல்ப் போனதற்கு யார் காரணம் என்கிற வினாவை, அந்த மேலே உள்ள பந்தி முதலில் ஏற்படுத்தியிருந்தாலும், சற்று ஏறக்குறைய ஒரு விநாடித் துளிகளுக்குப்பின், அந்த பந்தியில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்குக் கூடாக, அந்த அரசியல்வாதி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகத் தோன்றியது.

ஈழத்தமிழ் அரசியலுக்குள் தொடர்ந்து இரு தரப்பு கட்சி அரசியல் இருந்து வருவதோடு அக்கட்சிகள் முட்டுக்கொடுக்கும் மத்தியில் கூட்டாட்சியில் இன்று ஒண்ணாகி நிற்பது யாதெதுவாகினும் ‘மக்கள் நலன்’ என்பதில் இருந்து தள்ளியே இக்கட்சிகள் நிற்பதில் தம் இருப்பே முன்னிலை பெறுகிறது. இதொரு தேர்தலொன்றில் தம் பக்கப் பலம் மட்டும் சிந்திக்கும் பொழுதிலும் இதற்கான கட்டமைப்புப் பலம் கொண்டிருக்கிறோமோ? என்கிற எந்த வினாவுக்கும் விடை இவர்களிடத்தில் இல்லை. மக்களும் இவர்களின் மனப்போக்கின் வழியே பாதை தேடிடும் ஆட்டு மந்தைகளாக இருந்து விடுகிறார்கள்.

இந்த அரசியல்வாதியின் மனப்போக்கையும் செயலையும், //..நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை…//  என்கிற வார்த்தைகளின் காட்சிக்குள் உணர்ந்து கொள்ள முடிகிறது. இதில் எது நடைமுறை சாத்தியமானது என்பதை நாம் பார்க்க வேண்டிய சூழலில் அந்த அரசியவாதியின் அரசியல் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அது எதுவெனப் பார்க்குமிடத்து, இன்றைய அதிகாரத்திற்கான அரசியல் நிலவரத்தில் தத்தளிக்கும் அமைச்சரவையில் கடைசித் துரும்பிதுவாக இருந்து விடுவதில் அந்த அரசியல்வாதியின் முயற்சிக்குள் இந்த 13 வது திருத்தச்சட்டம் 28 வருட அவரது பாராளுமன்ற அரசியலில் மீண்டுமொரு தடவை பாராளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை அளவில் பயன்படுத்தப்படுகிறது.

சமத்துவத்துக்கும் அடிமைத்தனத்துக்குமான வேறுபாடு புரிந்து கொள்ளாத தலைமைத்துவங்களால் தேசியங்களின் அரசியலில் முற்போக்கு பாத்திரத்தை வகிக்க முடியாது! அத்தலைமைகள் எங்கிருந்து புறப்பட்டார்களோ அங்கேயே திரும்பவும் வந்து சேருவார்கள்! உலகம் உருண்டையெனச் சொல்லிக் கொள்வார்கள்! அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை நிரந்தர எதிரியுமில்லையென முதுகு வளைவார்கள்! தம் பெண்டீலர்களை மானப்பங்கப்படுத்தியவர்களை செங்குருதியில் கணக்கு தீர்ப்பதாக திரெளதிகள் கணக்காகக் கூறியவர்கள்,  கர்ணனாக தேர்தல்க் களத்தில் தவித்திட மக்களும் மனம் கொள்ளத் தயாராக இல்லை. இதற்கான நகர்வை இன்றைய போராட்டம் செய்வதென்பதே போராட்டத்தின் வழியே மக்கள் சென்றடையும் அரசியலாக இருந்துவிடும்?
Augu 07, 2022 

Leave a Reply