• May 20, 2023

மட்டு தலைநகரத்தில் மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டி! “பத்மநாபா சவால் கிண்ணம் – 2023” !!

மட்டு மாவட்டத்தின் மாநகரத்தில் கழகங்களுக்கிடையான மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் பத்மநாபா மக்கள் முன்னணியின் அணுசரணையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மட்டக்களாப்பு மாவட்டத்தில் உள்ள 32 கழகங்கள் பங்கேற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த 32 அணிகளில் 11 வீரர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் நெக்கவுட் முறையில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த 32 கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, “பத்மநாபா சவால் கிண்ணம் – 2023” எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இலங்கைக்குள் பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் மக்களின் வாழ்வாதரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சூழலில் யாரும் தொட்டுப்பார்க்க நினைத்திருக்காத வெகுசன மக்களின் உடல் உள ஆரோக்கியத்தை, இந்த இடர் சூழலில் தொட்டிருக்கும் முயற்சியை ‘நம்மொழி’ பாராட்டுகிறது.

வடக்கு கிழக்கு இலங்கைத்தமிழ் அரசியல் கார்ப்பிரட் அரசியலாக்கப்பட்ட போக்கில் அநாதரவாக விடப்பட்டிருக்கும் விழிம்போரத்து வெகுசன மக்களை கண்டடைந்த இந்நிகழ்வு அம்மக்களுக்குள் வாழ்வின் மீதான அவநம்பிக்கைகளை களைந்திருப்பதைப் போட்டிக்களம் வெளிப்படுத்துகிறது.

வடக்கு கிழக்கு இலங்கைத்தமிழ் வெகுசன அரசியலை முன்னெடுக்க அம்மக்கள் தயாராக இல்லையெனக் குற்றம் அம்மக்கள் மீது சுமர்த்தி  வாக்கு தேர்தலுக்குக் கூடாக பாராளுமன்ற செல்லும் கனவுகளில் தம் பொருளாதார செழிப்பை முன்னிறுத்தும் அரசியலுக்குள் இப்படியான நிகழ்வுகள் சில கட்டுடைப்புக்களை அரசியல் பரப்பில் செய்கிறது.

இந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு முன்னிலைப்படுத்தப்படும் வெகுசன மக்கள் அரசியல்த் தலைமையின் அடையாளம் என்பது வடக்கு கிழக்கு அரசியலுக்கு புதிய பரிணாமத்தைக் கொடுக்கிறது எனலாம். 

Leave a Reply