• April 29, 2023

முன்னகர்த்தப்படும் அரசியல்!

By: Nixson Baskaran Umapathysivam

நிலாந்தனின், “இன்னொரு இயற்கை? தவ.தஜேந்திரனின் காண்பியக் கலைக்காட்சிகள்” என்கிற கட்டுரை வாசித்திருந்தேன்.

நிலாந்தனின் அக்கட்டுரை எனக்குப் பரீட்சயமில்லாதொரு கலை படைப்புப் பற்றிப் பேசுகிறது; என்னை, அது வாசிப்பில் ஆர்வத்தைக் கொடுத்து மேனோக்கி நகர்த்தியது. அதொரு அனுபவம்!

“நான் இயற்கையைப் பிரதி செய்பவனல்ல,இயற்கையைப்போல தொழிற்படுபவன்”…என்று பிகாசோ ஒருமுறை சொன்னார்… என்பதில் இருந்து தொடங்கும் கட்டுரைக்குள், தவ.தஜேந்திரனின் படைப்பாக்கம் பற்றி நிறையக் கதைத்துக் கொண்டு போகிறது.

//… இணுவில் பிரசவ விடுதி அமைந்திருப்பது தென்னிந்திய திருச்சபையின் வளாகத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவ இறை ஊழியர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு வளாகம்.இப்பொழுது பெருமளவுக்கு பாழடைந்துவிட்ட ஒரு கட்டடத் தொகுதி. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இங்கேதான் பிறந்தார். பாழடைந்த மரபுரிமைச் சொத்தாகக் காணப்படும் அந்த மாடிக் கட்டடத்தை பின்னணியில் வைத்து தஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது முதலாவது காண்பியக் கலைக் காட்சியை ஒழுங்குபடுத்தினார்…// என்கிற பத்திக்குள் அரசியல் வரலாற்று நகர்வொன்றைப் புகுந்திவிடும் வல்லமையை கட்டுரையாளர் நிலாந்தன் நிகழ்த்திக் காட்டுகிறார்.

“…விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இங்கேதான் பிறந்தார்..” என்பதுதான் வரலாற்று அரசியல் தரவாக, இக்கட்டுரைக்குள் நிலாந்தனால் விதைக்கப்படுகிறது.

இங்குதான் படைப்பாளன் கல்வியாளரையும், விரிவுரையாளரையும், அரசியல்வாதிகளையும் தாண்டி புவியல் அமைப்பினை வரலாற்றுத் தரவுகளோடு காலத்திற்கும் முன்னிபந்தனையோடு நகர்த்துகிறான் என்பது நிரூபிக்கப்படுகிறது.

April 29, 2023

Leave a Reply