போதிமரத்தின் கீழ்…, இதை யார் சொல்றதென்கிற விவஸ்தையேதுமின்றி புலிகளின் நிழலில் சாமர்த்தியமாக பெரிய மனுசர்களானவர்கள் போதிமரமென்கிற NPP இன் தயவில் நாம் புதிதாக ஞானம் பெற்று விட்டதாகச் சொல்கிறதென்பது வெள்ளைக்காரனுக்குக் கணக்குப் பாடமெடுத்த அடங்காத்தமிழன் மரபுச் சில்வண்டு சாத்தானை இழுத்து நடு ரோட்டில் விட்டிருக்குது; அதுக்கு சாத்தானின் வேதம் எப்படி என்பதைப் புரிய வைக்க வேண்டாமோ?
இரண்டு photos சொல்லும் கட்சித் தலைவர்களின் இன்றைய அதிகார நிலையையும் அதனூடாக வரலாற்று திசை வழி நிகழ்வுகளின் மீதான முடிவுகளின் விளைவுகளுக்குக் கூடாக அக மனநிலையையும் photos களில் அவர்களது வரிசை நிலையையும் வைத்துக் கூட்டிக் கழித்துக் காலம் photos க்கூடாக வெளிப்படுத்தி நிற்கிறது.

எலி கொழுத்து பூனைய கலியாணம் முடிக்க கூப்பிடுது என்கிற சாத்தியமற்றதொரு விசயத்தை குகன் ஜேம்ஸ்பாண்ட்…, Nadarajah Kamalaharan தன் தொப்பியைச் சரி செய்து கொண்டு கேட்டது சாத்தனுக்குச் சிரிப்பைக் கொடுத்தது.
குகன் ஜேம்ஸ்பாண்ட்…, Nadarajah Kamalaharan மட்டுமல்ல இன்டைவரைக்கும் EPRLF யை புலிகள்தான் அழித்தார்களென நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் எங்களைத் தரை ரிக்கெட், Third class tickets என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களை Second class peoples என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இன்னைவரைக்கும் இன்னார்ரை மகனென்றுதான் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர கட்சியின் செயல்பாட்டின் பொறுப்பில் தங்களை அடையாளப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள் சஞ்சலப்படுகிறார்கள்; வெட்கப்படுகிறார்கள்; தயங்குகிறார்கள்; பயப்படுகிறார்கள்.
கட்சிக்குள் இவர்களுக்கு துதி பாடுறதும் தொட்டாட்டு வேலையும்தான் கொடுக்கப்படுகிறது. வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் பிழைப்பு போகிறது. இந்தப் பிழைப்புவாதத்தில் மினுமினுப்புக் குஞ்சமெதற்கு?
நொந்து நூடில்சாகி கெட்டும் குட்டிச்சுவராகிய பின்னும் தேசம் திரையில் நான்…, நான்…, நான் தானென 90 இலிருந்து சுயபுராணம் பாடும் டக்ளஸ், EPRLF என்பது தானும் நாபாவும் சுரேஷ்ம், வரதருமெனக் காட்சிப்படுத்துகிறார். இது டக்ளஸ்…, ஈழ அரசியலில் பிரபாகரன் மாதிரி ஏகத்தலைமையாக விஸ்வரூபம் எடுப்பற்கு EPRLF இன் கேதீஸ்வரன், றொபேட், கபூர், கல்பனா, அக்கா தோழர், ஜேம்ஸ், சின்னவன், சுகு, மோகன், ராஜூ, ரமேஷ், ஈழமணி, மதன், அரபாத், ஐயாத்தோழர், சோலையூரான், றீகன்… எனப் பல நூறு ஆளுமைகளையும், பல ஆயிரம் உறுப்பினர்களையுய் கரைத்து மண்ணோடு மண்ணாக்கி விடுகிறதில் EPRLF இன் உழைப்பு முழுவதையும் தனிநபராகச் சுரண்டல் செய்ய முடிந்தது.
அது இன்டைக்கு மலம் மீது மொய்க்கும் ஈக்களைப்போல் தமிழரசுக்கட்சியின் மேட்டிமைக்குள் விட்டில் பூச்சிகளைப்போல் இவர்களை இழக்க வைத்திருக்கிறது. இதற்காவா ஆசைப்பட்டாய் பாட்டாளி வர்க்கத் தோழனே..?
சி.வி.கே.சிவஞானம் என்பது இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பொம்மை. இந்தப் பொம்மை கீ கொடுத்தால் மட்டும் இயங்கக்கூடியது. இப்ப இந்தப் பொம்மையை சுமத்திரன்தான் கீ கொடுக்கிறார்.
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர், கட்சிக்குள் எந்த அதிகாரமற்றவர்; சி.வி.கே.சிவஞானம் டக்ஸைப்போய் டக்ளஸின் மாளிகையில் சந்திக்கிறார். டக்ளஸ்சும் அவரது மாளிகையில் உள்ள சேவகர்களும்…, பொம்மைகளும் photos எடுத்து அக மகிழ்ந்து கொள்கிறார்கள்.
அடுத்த PHOTO இல் டக்ளஸின் ஜென்ம விரோதியென.., ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்காதென MGR பாணிக்கதை விட்டுக் கொண்டிருக்கிற சுரேஷ்…, சுமத்திரனோடு நிற்கிற photo வில் பின்னாடி நிற்கிறார்.
என் பார்வையில் சுரேஷ், சுமத்திரனுக்கு நெருக்கமாக நிற்கிறதிற்கு ஏதொன்று சுரேஷின் மனசைத் தடுத்து நிற்கிறதாகத் தோன்றுகிறது.
TNA இலிருந்து சுரேஷ் பிச்சிட்டுப் போனது மட்டுமின்றி வடக்கு மாகாண சபையை முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் பாரமெடுத்த தமிழரசுக்கட்சித் தலைமைகள் பின்னாளில் விக்கினேஸ்வரனுடன் சிக்கல் படுகிறார்கள்.
அந்த சந்தர்ப்பத்தை தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சியில் இருந்து சி.வி.விக்கினேஸ்வரனைக் கழட்டி சுரேஷ் தனியொரு கூட்டணி தொடங்கிறார்.
அது சாவா வாழ்வா என்றிருந்த விக்கினேஸ்வரனுக்கு அரசியலில் மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. அதன் பின் சுரேஷின் முயற்சி என்பது விக்கினேஸ்வரனை பாராளுமன்றம் அனுப்புகிறது. அதிலும் சுரேஷ் கையைப் பிசைந்து கொண்டு தன் அமைப்புக்குள்ளும் வெகுசனத்தின் மீதும் நொந்து கொள்கிறார்.
அதுவா மட்டிலும் தன் அரசியல் இயலாமையை சுரேஷ் உணர்ந்ததாரா என்றால் இல்லை.
TNA க்குள் இருந்த இயக்கக் கட்சிகளை அப்புறப்படுத்துகிறதே தன் strategy ஆக வைத்து செயல்பட்ட சுமத்திரனின் அரசியல் ஊடறுப்பைப் புரிந்து கொள்ளாத சுரேஷ் TNA க்குள் சுவரொட்டியாக ஒட்டிக் கொண்டிருந்த சித்தார்த்தனையும் செல்வத்தையும் திரும்பக் கழட்டி இன்னொரு புதிய ஐக்கியத்தை கூட்டணியை உருவாக்குகிறார்.
சுமத்திரனின் இந்த strategy போக்கையையும் வன்னி மாவட்ட தேர்தல் முடிவின் போக்கையும் விலாவாரியாக நாங்கள் முகநூலில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதில் குகன் ஜேம்ஸ்பாண்ட்…., Nadarajah Kamalaharan, நாங்கள் NPP க்கு முட்டு கொடுக்கத்தான் செய்வதாகத் தன் கையிலுள்ள சூட்கேஸை ஆட்டிக் கொண்டு சொல்லியிருக்கிறார்.
வன்னி மாவட்டத்தில் அதுவும் யாழ் மையவாத கட்சிகளின் தலைமைகளெல்லாம் யாழ்ப்பாணம் தங்கடை கோட்டையென அதற்குள் குந்தியிருக்கக் கோட்டைக்கு வெளியே பரந்த வெளியும் தரவையும் ஏரியும் குறுங்காடும் பெருங்காடும் நிறைகொள் உயிரினங்களுமென வன்னியைப் புறப்போக்கு ஏரியாவெனத் தட்டிக் கழிக்க கூட்டணிக்குள் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று முதன்மைக்குழுவாக நிமிர்கிற பொழுது போனஸாக ஒரு ஆசனம் கிடைத்துக் கொண்டிருக்கிற நல் வாய்ப்புப் பற்றி அறிவும் சிந்தனையுமின்றி அதிலும் தன் கட்சியே அந்த மூன்று ஆசனங்களையும் தனதாக்கிக் கொள்கிற பிரக்ஞையுமற்று செல்வமும் எடுபட்டு போகிறாரென்றால் இவர்களை நம்பித்தான் ஈழத்தமிழ் அரசியல் இருக்க வேண்டுமாவென்கிற கேள்வி எழவில்லையா மக்காள்?
TNA க்குள் சுமத்திரனின் அழிச்சாட்டியம், தகிடுத்தோம்கள், வெறுப்பேத்தல்கள், அவமானப்படுத்துதல்கள், அவமரியாதைகள் எனக் கிளம்பி வந்த நீங்கள், கட்சியொன்றின் பெயருக்கும் பதிவுக்குமாக தயவு கேட்டுப்போன Nadarajah Kamalaharan நீங்கள் அந்தாளின் தலைமையில் இருக்கக்கூகூடிய கட்சியை இப்புதிய கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள இவர்களுக்கு எது தடுத்தது குகன் ஜேம்ஸ்பாண்ட்…?
ஆயிரம் பூக்கள் மலரட்டுமென்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் டக்ளஸ், தன்னை விட்டு வெளியேறிய பொழுது சந்திரகுமாரின் தனிக்கட்சி பயணத்தை மன ரீதியாக ஏற்றுக் கொள்ளாமல் தவிக்கிறார்.
2020 இல் நடந்த தேர்தலுக்குப் பின்னொரு நேர்காணலில் சந்திரகுமாரின் வெளியேற்றத்தை மீண்டும் நினைவுபடுத்தி தேர்தலில் தானென்ன தோத்தா போயிட்டேன்? எனக் கேள்வி எழும்பியிருந்தார்.
அடிக்கடி டக்ளஸ் தன்னைவிட்டு வெளியேறியவர்களைப் பற்றிய கதையாடல்களில் ரயில் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். ஆனால், 2024 இல் அண்ணன் டக்ளஸ் தேர்தலில் மண் கவ்வினதிற்குப் பிறகு ரயில் கதையைச் சொல்வதைக் காணோம்.
ஏனென்றால், டக்ளஸ் ரயில் பயணம் செய்கிற பொழுது ரயிலோட்டத்திற்கு காட்சிகள் கடந்தும் பின்னோக்கி செல்வதையும் பார்த்திருக்கிறார். அவை திரும்ப வராதென்கிறதாக நினைத்தும் நாங்கள் திரும்ப சினுக்கு வரமாட்டோமென நினைத்திருக்கக் கூடும்.
யார் எதை நினைத்தாலும் காலம் ஒன்றைச் செய்ய நினைக்கும். தோல்வியோ, பிரச்சினைகளோ, நிகழ்வுகளோ ஏன் மரணம்கூட நினைத்த மாத்திரம் நடந்து விடுவதில்லை. ஆழிப்பேரலை போன்றது…, கடலை போன்றது.
அதன் தொடக்கம் நிகழ்வின் காட்சிப்படுத்தலில் இருந்து விடுவதில்லை. அது எங்கேயோ ஒரிடத்தில் தொடங்கி வளர்ந்து நாளாகித்தான் எம்மை வந்து சேருகிறது.
டக்ளஸின் 2024 இன் தோல்வி 1994 இலிருந்து சின்னச் சின்னதாகத் தொடங்கி ஆழிப்பேரலையாக 2024 இல் டக்ளஸை வந்தடைந்திருக்கிறது.
டக்ளஸ் புளுகிற மாதிரி விண்ணனின் யாழ் ஊடக மையப் பேட்டியால் நடந்ததல்ல மக்காள். வெகுசன வெறுப்பென்பது டக்ளஸ் மீது மக்களைச் சலிப்படைய வைத்த காரணிகளென்பதாக.., அவை ஆழிப்பேரலை போன்றதுதான் பாட்டாளி வர்க்க தோழர்களே!
சுமத்திரனின் strategy என்பது சீட்டுக்கட்டை குலைச்சுப்போட்டு திரும்ப கூட்டு சேர்க்கிறதுதான். அதில் சீட்டுக்கட்டைக் கலைத்து 2024 இல் தேர்தல்களைச் சந்தித்த சுமத்திரன் அத்தேர்தல்கள் தந்த படிப்பினைகளுக்குப்பின் சீட்டுக்களை ஒன்றாகச் சேர்க்கத் தொடங்குகிறார்.
அது பாராளுமன்றம் செல்ல முடியாத துர்பாக்கிய சந்தர்ப்பத்தில் மாகாண சபை தேர்தலிலாவது அதிகாரச் சிம்மாசனத்தைத் தொட்டு விடலாமென்கிற தன் கனவை நனவாக்குகிறதில் இருக்கிற முயற்சியாகக்கூட இருக்கலாம்?
இது அனேகமாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் யாரெல்லாம் ஐக்கியம், கூட்டணி, கூட்டமைப்பெனத் பேசத் தொடங்குகிறார்களோ அவர்களிடத்தில் தாங்கள் தோத்தே போயிடுவோமென்கிற மரண பயத்தின் நிழலும், நிழலின் கறுப்பும் ஏற்படுத்துகிற விஞ்ஞானத்தின் Chemistry work out ஆவதின் கொதிநிலை வெளிப்பாடாக இருக்கிறது.
இதை டக்ளஸ், பிரபாகரன் போன்ற எகாதிபத்தியவாதிகளுக்கு தங்கள் இருப்பிற்காக மற்றவர்களைப் பலகீனப்படுத்தும் சந்தர்ப்பமாகவே முதன்மைப்படுத்திக் காட்சிப்படுத்த முனைவார்கள். ஆனாலும், உதறலெடுக்கும் மரணப் பயத்தை வெளிக்காட்டும் சம்பவங்களைக் கேட்கிற பொழுது அது உண்டாக்கும் முக மறுதலை மறுத்து முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாலும் வயிற்றுக் கலக்கலைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி washroom போவதைத் தவிர்க்க முடியாமல் தவிப்பதைப் பார்த்திருப்போம்.
நாங்களும் அதைப் பார்த்திராத மாதிரியும் அதை மறந்தும் வெளியில் பேசாமல் ஹீரோவின் இமேஜை டமேஜ் செய்யாமல் பேணியிருப்போம். இதெல்லாம் எமக்குள் இருக்கும் குழுவாத மனப்போக்கில் செய்கிறோம்.
அதை இவர்கள்…, இந்த அரசியல் தலைமைகள் தங்களது இமேஜை மெருகு செய்ய…, டெவலப் செய்ய…, மோடிபை செய்ய பயன்படுத்துகிறார்கள்.
இதனால் நாங்கள் கேவலப்படுத்தப்பட்டு கேவலப்பட்டு ஆவென்ன முடியாமலும் விழுங்கவும் முடியாமலும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறோம் தோழர்களே..!
‘போராட வந்த என் தம்பியை புலிகள் அடித்தே கொன்றனர்! தங்கை சோபா கடற்படை முகாம் தாக்குதலில் வீரமரணம்!’ என்று தலைப்பிட்டு ‘தேசம்’ ஜெயபாலன், இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய மிக முக்கிய ஆளுமை மட்டுமல்ல இலங்கை அரசியலில் இருந்தும் பிரிக்க முடியாதவரும்கூட கிட்டத்தட்ட பதின்மூன்று கொலை முயற்சிகளில் இருந்து தப்பிய மிகவும் ஆயுள் கெட்டியான… என்று பில்டப் கொடுத்துத் தொடங்குகிற உரையாடலுக்குள் மூழ்கி நீந்தத் தொடங்கினால் குகன் ஜேம்ஸ்பாண்ட் நாங்கள் என்ன லூசாவென்கிற நினைப்புத்தான் எனக்குள் எழுந்தது.
ஏனென்றால், 2020யைத் தொடுகிற காலத்தில் VISION – 6 என்கிற தன்னார்வக்குழுவொன்று…, அக்குழுவானது புலம்பெயர் EPRLF சார்ந்த நபர்களும் பழைய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நபர்களும் இணைந்து டக்ளஸ், சுரேஷ், வரதர் ஆகியோருக்கிடையே நல்லிணக்கமொன்றை ஈழத்தமிழர்களின் நலன் கருதி மேற்கொண்டிருந்தனர்.
அது ஏதுவும் சாத்தியமற்றதாகித்தான் போயிருந்தது. அந்த அனுபவத்தோடு சம்பந்தப்பட்ட நபர்களோடும் உரையாடவும், அக்களச்சூழலையும் அறிந்து கொள்ளவும் முடிந்ததென்பது இம்மூவருமே தங்களுக்கிடையேயான இணக்கப்பாட்டை இனிவரும் காலங்களில் தேட வேண்டுமேதவிர முட்டாள்களாக மீண்டும் மீண்டும் இம்முயற்சியை நாம் மேற்கொள்ளக் கூடாதென முடிவுக்கு வருகிறோம்.
டக்ளஸின் இக்காணொளித் தொடர்களை வைத்தும் திரும்பவும் சுரேஷ் சுமத்திரனை நெருங்குவதையும் வைத்து இன்டைக்கும் EPRLF என்கிற இயக்கத்தில் இருந்தவர்களுக்கிடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லையென்கிறது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
குகன் ஜேம்ஸ்பாண்ட்…, Nadarajah Kamalaharan முகநூலில் குத்தி முறிந்ததென்பது நாங்கள் சொன்ன கருத்தைத் திசை திருப்புவதற்கென்பதும் தெரிந்ததுதான் ஜேம்ஸ்பாண்ட் மச்சி.
இதே காணொளியில் டக்ளஸ் ஒரிடத்தில் சொல்கிறார்; மகேஸ்வரனின் தம்பியை PLOTE அமைப்பினர் பிடித்து நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் மகேஸ்வரன் தன்னைக் கேட்டுக் கொண்டதால் தோழர் சித்தார்த்தனை தான் தொடர்பு கொண்டு மகேஸ்வரன் தம்பியை விடுவித்து கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
அப்ப டக்ளஸ் இன்னா சொல்ல வாறாரென்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதுதானே?
இந்தப் பூனையும் பால் குடிக்குமாவென மூஞ்சை வைத்துக் கொண்டு இதெல்லாம் செய்திருக்கிறாரென்று கேள்வி சித்தார்த்தன் மீது வராதா கண்ணுகளா?
ஆனால், ஒரிஜினல் கதை அப்படியில்லை. 95 இல் ஆர்மி புலிகளை வன்னிக்குள் தள்ளிய பிறகு டக்ளஸ் தன் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் ஜெகனை வைத்து ஸ்ரீதர் தியேட்டரில் திறக்கிறார். ஜெகன், EPRLF இல் வட்டுக்கோட்டை தொகுதியின் இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர்.
ஸ்ரீதர் தியேட்டரில் அலுவலகம் திறந்த காலத்தில் முதல் கஸ்டமரே மகேஸ்வரன்தான். முதலில் மகேஸ்வரன் ஆறு மோட்டார் சயிக்கிள்களை ஜெகனிடம் வாங்கிக் கொடுத்து நெருக்கமான நட்பைப் பேணத் தொடங்குகிறார்.
ஆனால், மகேஸ்வரனுக்கும் டக்ளஸ்க்கும் எப்ப லாடாய் தொடங்கிச்சுதோ தெரியாது; 99 இல் முன் காலாண்டோ, அரையாண்டு காலமோ தினமுரசு பத்திரிகையில் தொடர்ச்சியாக இரு இதழ்களில் ரமேஷ் (அற்புதன்) முழு பக்கத்தில் மகேஸ்வரனை லெவெட் அன்டு ரையிற்ட் வாங்கியிருப்பார்.
இவ்வளவு தூரம் மகேஸ்வரனென்கிற தனிநபருக்கு தினமுரசு அற்புதன் மெனக்கிட்டு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறாரென்றால் அதொரு சீரியஸ்ஸான மேட்டராகத்தான் இருந்திருக்க வேண்டும்?
அது மகேஸ்வரனை சீன்டிப் பார்த்த மாதிரி அப்பாலேதான் டக்ளஸ் புரிந்திருப்பாரெனத் தெரிந்து கொள்ள முடியும். ஏனென்றால், அடுத்து வந்த தேர்தலில் மகேஸ்வரன் UNP இல் அரசியல் களம் காண்கிறார்.
டக்ளஸ் 94 இல் நடந்த தேர்தலில் எல்லாத் தமிழ்க்கட்சிகளுக்கும் தண்ணி காட்டி 9 ஆசனங்களை லம்பா வாரிக் கொண்டு யாழ்ப்பாணம் தன் கோட்டை.., தன்னை யாரும் ஆசைக்க முடியாதெனத் தன் கட்சிக்குள் பின்னாளில் தனக்கு போட்டியாக வரக்கூடியவர்களைக் களையெடுக்கத் தொடங்கியிருந்தார். அது 2000 இல் கட்சியின் முமுக்கட்டுப்பாடும் டக்ளஸ் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தார்.
இந்தக் குளறுபடிச் சூழலுக்குள் புலிகள் தாக்குதல்களெள்பதில் 58 பேருக்கு மேல் தீவகத்தில் EPDP உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
மறுபுறத்தில் அரசியல் ரீதியாக பெரும் சவாலை மகேஸ்வரன் கொடுக்கத் தொடங்கியிருந்தார். அந்த சமயம் டக்ளஸ் சந்திரிகா அரசோடு நேரடி பங்குதாராகியிருந்தார். அது மகேஸ்வரனுக்கு UNP இன் நெருக்கம் சாதகமாக அமைகிறது. அவர் பத்தாயிரம் வாக்கில் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இதற்குள் அமிழ்ந்திருக்கும் இருவருக்குமான முறுகலுக்குள் PLOTE மாணிக்கதாசன் கடத்தி வைத்திருந்த மகேஸ்வரனின் தம்பியை சித்தார்த்தனிடம் சொல்லி விடுவித்ததென டக்ளஸ் கூறுவது சாத்தியமா?
ஒன்று இந்த முறுகலுக்குள் மகேஸ்வரன் டக்ளஸைக் கேட்டிருப்பாரா மற்றொன்று சித்தார்த்தன் சொல்லி மாணிக்கதாசன் விட்டிருக்குமா?
இல்லை 1999 இற்குப் பிந்திய காலமாக இருந்தால் மாணிக்கதாஸன் 1999 இன் கடைசியில் படுகொலை செய்யப்படுகிறார்; சித்தார்த்தன் PLOTE இன் தலைவராக வந்து விடுகிறார்; 2008 இல் மகேஸ்வரன் படுகொலை செய்யப்படுகிறார்.
அப்ப எதுதான் உண்மை; மொட்டையாகக் கதை சொல்லுதலென்பது எதையோ குழப்புவதற்காக இருக்கும்?
மகேஸ்வரன் படுகொலைதாரி புலிகளென்பதாகவும் தன்னைக் கொல்ல வந்த புலியை தான் பெரும் தன்மையோடு மன்னித்து விட்டதாகவும் இக்கதைக்குள் விஜயகலாவை இழுத்து விடுவதென்பது மகேஸ்வரன் படுகொலைதாரி யார் என்பதன் மீதான சந்தேகம் மேலும் வலுக்கவே செய்கிறது.
கதை அப்படியல்ல; ஆனால், மகேஸ்வரனின் தம்பியின் விடுதலையில் EPDP சம்பந்தப்படுகிறது. அது அப்பொழுது மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜெகன் மூலமே நடக்கிறது.
மகேஸ்வரன் தனிப்பட்ட ரீதியாக தனக்கிருந்த நட்பின் காரணத்தை வைத்து ஜெகனோடு தொடர்பு கொள்கிறார். ஜெகன் தனக்கிருந்த தொடர்பில் ஆர்மி பிரிகேடியர் ஒருவர் மூலமே மாணிக்கதாசனிடம் இருந்து தம்பியை மீட்டுக்கொடுத்திருந்தார்.
ஏனென்றால், நான் இதை இங்கு பேசுகிறேனென்றால் இதே காணொளியில் தன்னோடு இணைந்து EPRLF இலிருந்தும் EPDP யைத் தொடங்குவதிலும்கூட பயணித்த அசோக் சந்திரகுமாரை டக்ளஸ் ஒரு வாங்கு வாங்கியிருந்தார்.
டக்ளஸ் வெறுமனே ஆயிரம் பூக்கள் மலரட்டுமெனச் சொல்வதை நம்புகிற சூழல் இன்றைக்கும் EPRLF க்குள்ளும் EPDP க்குள்ளும் இருக்கிறதென்பதால் சுமத்திரன் கூட்டிய கூட்டணிக்குள் முன் வரிசையில் கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அசோக் சந்திரகுமார் சிரித்துக் கொண்டு நிற்பதற்குக் கொடுத்த அடியெனத்தான் இதை நான் நினைக்கிறேன்.
டக்ளஸ் சொல்ற மாதிரி அசோக் சந்திரகுமார் சொன்னதாக இருந்தால் IPKF காலத்தை வைத்து சொல்லப்பட்டதாக இருக்கிறதிற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அதைத்தான் டக்ளஸ் சொல்கிற கதையில் குறிப்பிடப்படும் காலமும், கொழும்புக்கு பிரேமதாஸாவைச் சந்திக்கச் சென்ற காலமும் IPKF வெளியேறிய காலமும், பிரபாகரன் பிரேமதாஸாவோடு தேன்னிலவை முறித்துக் கொண்டு மீண்டும் சண்டையைத் தொடங்கியிருந்த காலமாக இருக்கிறது.
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற வேலையைக் கனகச்சிதமாகப் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடக்கூடியவர்தான் டக்ளஸ்.
இவர் குறிப்பிட்ட காலம் அல்லது EPDP கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட காலத்தில் அசோக் சந்திரகுமாரோடு கொழும்பில் நின்றவர்களில் மிக முக்கியமானவராக இன்றும் டக்ளஸோடு நெருக்கமாக இருக்கக்கூடிய திலக் இருக்கிறார். ஆனால், இவர்களைப் போன்றவர்கள் உண்மையைப்பேசக்கூட வாய் திறக்காக்கூடியவர்களல்ல.
89, 90 களில் IPKF வோடு Return ஆகி மண்டபம் காம்பில் EPRLF உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருந்து EPDP க்கு ஆளணி திரட்டச் சென்றிருந்த பொழுது…, முதலில் சீலன் இராமமூர்த்தி, புண்ணியம் போன்றவர்கள் வந்திருந்தனர்.
அதுவும் சீலன் இராமமூர்த்தி தமையனைப் பார்க்க சென்னை கே.கே.நகருக்கு வந்திருந்தார். அங்கு இருந்த நிலவரத்தைப் பார்த்துவிட்டு டக்ளஸ் கேட்ட பொழுது தன்னிடம் இருந்த காசு முழுவதையும்…, அதொரு இந்திய ரூபா 10 ஆயிரம் இருக்கும். அதை மறுப்பெதுவும் சொல்லாமல் கொடுத்திருந்தார்.
ஒரு நாள் தமையனோடு தங்கிவிட்டுச் செல்லலாமெனத் தங்கிய பொழுது அன்றிரவு சென்னைக் காவல்துறை அவ்வீட்டைச் சுற்றி வளைத்து அங்கிருந்தவர்களைக் கைது செய்த பொழுது சீலன் இராமமூர்த்தியும் சேர்த்தே கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன் பின்னாடி ஒருநாள் மண்டபம் அகதி முகாம் சென்றிருந்த பொழுது சுப்பையாத் தோழரைப் பார்த்து பேசக்கூடியதாக இருந்தது. EPDP இலங்கைக்குப்போய் என்னதான் செய்யப்போகிறீர்களென எதிர் மனநிலை விவாதத்தை முன்னிலை நிறுத்தியே அவரது பேச்சிருந்தது.
பின்னாளில் சீலனோ, நானோ EPDP யை விட்டு வெளியேறிய பின்னாடி 10 வருடங்கள் கழித்து சுப்பையா தோழரை டக்ளஸோட பார்க்க முடிந்தது. அவ்வளவுக்கு அகதி முகாம் வாழ்வியல் பெரும் துயரமிகுந்ததாகவும் தேவைகளைச் சேமித்து வைத்துப் புளுங்கிக் கொள்வதைத்தவிர எதுவுமே இல்லையென்கிறதைத்தான் இந்தியாவின் தமிழக அகதி முகாம் வாழ்வியல் கொடுத்திருந்தது.
தனிநாடொன்றின் விடுதலைக்காக தம்முயிர்களை ஈகை செய்யத் துணிந்த மனசுகளுக்கு லயன் போன்ற சிறு அறைக்குள் தம் வாழ்நாள் கரைந்து போவதைவிட தமக்கு உடன்பாடெதுவும் இல்லாதவிடுத்தும் தம் நிலத்தில் தம் மக்களுக்கு ஏதோ செய்தோமென்கிற திருப்தி இருக்குமென நினைத்துதான் டக்ளஸ்சும் நம்மளு என்று அவரை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள்.
நாபா படுகொலை செய்யப்பட்ட பின் முழுக்காலமும் தான் செயலாளர் நாயகமாகவும் தலைவராகவும் இருந்தேனெனக் காணொளி உரையாடலில் சொல்கிற சுரேஷிடமும் இந்த தவறான செறிவு மாறுதலென்பது வருங்காலத்தில் EPRLF யை அடியோடு அழித்துவிடுமென்கிற எந்தவொரு பிரக்ஞையும் இல்லாமல் புலிகள் சார்பு நிலைப்பாட்டை எடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு (TNA) க்குள் பிரபாகரனின் காலடியில் புனிதராகிறார்.
டக்ளஸோ தன் அதிகாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இலங்கையின் ஆட்சியாளர்களோடு எந்தக் கூச்ச நாச்சமின்றி கரையத் தொடங்குகிறார். அதில் கிடைத்த பொருளாதார பலத்தில் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகளாக, பொம்மைகளாக இவர்களை நடாத்தி தன் மனசைத் திருப்திபடுத்திக் கொள்கிறார்.
இதற்கான உதாரணமாக பல பேர் இருந்தாலும் இரண்டு நபர்களை அடையாளம் காட்டுகிறேன். அவர்கள் இருவரும் EPRLF க்குள் எவ்வளவு ஆளுமையுள்ளவர்களாக இருந்தார்களென்பதைச் சீலன் இராமமூர்த்தி சொல்லேக்க நான் சொக்காகிப் போனேன். ஆனால், கண்ணோட்டம் அமீன், டக்ளஸை எவ்வளவுக்கு விமர்சன ரீதியாக EPRLF க்குள்ள எதிர்த்து வந்திருந்தார் என்கிறது அனேகருக்கும் தெரிந்ததுதானே?
அவர் பிற்காலத்தில் டக்ளஸின் நிழலில் அடிமையாக, பொம்மையாக டக்ளஸிஸ் ஏகாதிபத்திய முதலாளித்துவ செயல்பாடுகளை அனுசரித்தே தன் தனிபட்ட வாழ்க்கைக்காக டக்ளஸோடு சமரசமாகிறார்.
மற்றவர் நக்கீரன் போராட்ட காலத்தில் 86 இற்கு முன்னாடி EPRLF க்குள் வகுப்பெடுக்கிற நபர்; ஆனால், பின்னாடி லாயிட்ஸ் ரோடில் டக்ளஸிடம் மாதாந்தக் கொடுப்பனவு என்பலப் எடுத்திட்டு போகிற நபராக மாறிவிட்டிருந்தார்.
நக்கீரன் போன்றவர்கள் லாயிட்ஸ் ரோட்டில் மெளனிகளாக இறுக மூடி தம் வாய்க்குப் பூட்டு போடுகிறவர்கள் EPDP பார்க் ரோடு அலுவலகத்தின் மாடி அறையில் பெரும் ஈழ அரசியல் விமர்சகர்களாக மாறிவிடுகிறார்கள். இதில் மூன்றாவது மனிதன் பெளஷாரும் மிக முக்கிய நபராகவும் அங்கிருந்து இருக்கிறார். இவர்களின் முக்கியமாக விமர்சனக் குற்றச்சாட்டு எதுவென்றால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தோடு துணைப்படையாக செயல்படுவதென்பதாகும். ஆனால், இவர்களுக்கு அந்த சுண்ணாம்பு சுவர்களிலும் டக்ளஸின் காதுண்டென்பதை மறந்தே குஷியில் வெளுத்து வாங்கிவிடுவார்கள்.
இந்த விவாதம் அனைத்தும் லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் டக்ளஸ்க்கு கடத்தப்பட்டுவிடும். இதைக் கேட்கிற பொழுது டக்ளஸ்க்குக் கடுப்பு தலைக்குள் சூடாக ஏறும்.
அந்தத் தீவகச் சூழலில் இருந்துவிட்டு கொழும்பு பார்க் ரோட்டுக்கு வருகிற தருணங்களில் ஒட்டுமொத்த கொழும்பு EPDP ஆட்களே என்னைத் துரோகியாக பார்த்தார்கள்.
ஏனென்றால், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளாலி வழியாக புலிகளின் பாஸ் நடைமுறைகளைக் கடந்து தாண்டிக்குளம் இராணுவக்கெடுபிடிகள், விசாரணைகள் எல்லாம் முடிந்து கொழும்பு EPDP அலுவலகம் வந்து நிற்கிற பொதுமக்கள் தம் மனச்சூழலில் சொல்லுகிற கதையைக் கேட்கிற பொழுது தம் குருதி சூடேறுவதைத் தன்னுணர்வில் இவ்வாறுதான் வெளிப்படுத்த முடியுமென்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால், நீங்களும் இம்மக்களும் EPDP அலுவலகத்தில் தின்கிற உணவும், ஏறிச்செல்கிற வாகனமும், தலைக்கு மேலே ஒடுகிற மின் விசிறியும் அந்தத் துணைப்படைக்கான கொடுப்பனவில்தான் நடக்கிறதென்பதை மறந்திட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்தக்கடுப்பும் அந்தக் கடுப்பும் சேர்ந்து டக்ளஸின் நக்கலென்பது இவர்களின் EPRLF விம்பத்தை, இவர்களை ஆவென்று பெரும் ஆளுமைகளென வியந்து நிற்கிறவர்களுக்குள் உடைத்து சிறுமை செய்யவே செய்கிறது.
86 இல் சர்வதேச மகளீர் தினத்திற்கு ஒழுங்கு நெருப்புத்தினத்தில் சுரேஷ் பேசிய பேச்சென்பது டக்ளஸின் அட்டைக்கத்திக் கதைக்கு எதிர்வினையாக இருந்ததெனக் கூறுபவர்களும் உண்டு.
அது புலிகள் EPRLF வைத் தடை செய்த பொழுது டக்ளஸின் ஆட்களை ஒரு மாதிரியும் சுரேஷின் ஆட்களையும் வேறு மாதிரியும் கவனித்தார்களெனவும் கூறுவதைக் கேட்க முடிகிறது.
இதைவிட, டக்ளஸ் காரைநகர் கடல் படை தளத்தை தாக்குதல் செய்கிற பொழுது சுரேஷ் கிளிநொச்சி பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் செய்யச் சென்றதாகச் சொல்கிறார்கள்.
இப்படி நிறைய கதைகள் உண்டு. அதனால், விவாதத்திற்கான கூற்றுகளை இத்தோடு நிறுத்திக் கொண்டு முடிவுரையைச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன்.
குகன் ஜேம்ஸ்பாண்ட் உங்களுக்கு Nadarajah Kamalaharan யை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர்தான், //…மேற்படி மூவரையும் ஒருங்கிணைத்து அரசியலை வழிநடத்தும் மார்க்கங்களை கண்டறிவதை விட்டு விட்டு…// என்றும் //…முடிந்தால் EPRLF இன் அரசியலில் அனுபவமிக்க தோழர்களை ஒருகுடையின் கீழ் கொண்டுவரலாமா என யோசியுங்கள். முயலுங்கள்…// என்று வீறாப்புக் கேள்வியைக் கேட்டிருந்தார். அதுகூட அவர் சுயமாகக் கேட்டிருப்பாரா என்றாவது குகன் ஜேம்ஸ்பாண்ட் உங்களுக்குத் தெரியுமா?
அது பற்றி எதாவது உங்களுக்கு சிந்தனை உண்டா?
வரதர், சுரேஷ், டக்ளஸ் இந்த மூவருக்கும் இடையில் என்னதான் பிரச்சினை…?
இப்பக்கூட மாகாண சபைக்கான கருத்தரங்குகளை சுரேஷ் முன்னெடுக்கிறார்; வரதர், மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட முழு அதிகாரங்களோடு அது இயங்க வைக்கப்பட வேண்டுமென்கிறார். டக்ளஸோ மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியெனச் சொல்கிறார்.
இவர்களுக்கிடையே என்னதான் பிரச்சினை…?
வரதர் ஒரு பேராசிரியர். அவர் கட்சியொன்றை டக்ளஸ், சுரேஷ் கணக்கில் கட்டி ஆள முடியுமாவென்றால் இல்லையென்றுதான் நான் சொல்வேன்.
ஆனால், ஒரு களத்தை உருவாக்கிக் கொடுத்தால் அப்பாதுகாப்பிற்குள் அக்களத்திற்கு குந்தகம் வராமல் தன் நிர்வாகத்தால் வஞ்சகமில்லாமல் செழுமையாக்கி விடுவார்.
இதை அவர்கள் இருவரும் தப்பிதமாகப் புரிந்து கொண்டு அட்டைக்கத்தியை தூர எறிந்து விட்டு அவுட் மோட்டார் சாப்பில் அடித்த நிஜக் கத்தியை எடுத்து செருகிவிடத் துடித்ததினால் வரதர் மூன்றாவதொரு மையப்புள்ளியாகப் பார்க்கும் அரசியல் சூழல் நேர்ந்திருக்கிறது.
இதை தங்கள் மனதில் இருத்தி வைத்துக் கொண்டு டக்ளஸ்சும், சுரேஷ்ம் நம்பகத்தன்மை கொண்ட கட்சிக்கு வெளியே இருந்து மக்களதிகார பிரதிநிதித்துவச் சூழலுக்குள் பல பேரைக் கொண்டு வருகிறார்கள்.
அதில் டக்ளஸ் பக்கத்தில் தவராசா, மகேஸ்வரி வேலாயுதம், யோகேஸ்வரி பற்குணம், சட்டத்தரணி செலஸ்டீன், புவி மற்றும் காத்திருப்பு பட்டியலில் டிவகலா போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் எப்படி உள்ளே கொண்டு வருகிறார்களென்பதை விலாவாரியாகப் பேசப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது. அதனால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசுகிறேன்.
சுரேஷைப் பொறுத்தவரைக்கும் அம்பாறையில் ஒரு சிங்கள நபர், சிறிதரன் சிவஞானம், ஐங்கரநேசன், நீதியரசர் விக்கினேஸ்வரனெனத் தொடர்கிறது.
ஆனால், யாருமே இவர்களது கைக்குள் இருந்ததாகச் சரித்திரம் கிடையாது. அப்படியிருந்தும் இவர்களோடு தொடர்ந்தும் சமரசமாவதில் எந்த வெட்கமும் இவர்களுக்கு இருந்ததில்லை.
இப்பொழுது குகன் ஜேம்ஸ்பாண்ட் நீ சொல்லு; Nadarajah Kamalaharan கேட்டிருந்த செயல்பாட்டில் வரதர் அவுட்டுக்குப் போய் விடுகிறார். மாறாக, டக்ளஸ்க்கும் சுரேஷ்க்கும் இடையில் இணக்கம் ஏற்பட வேண்டியதுதான் மிச்சம்.
அந்த இருவரின் இணக்கத்தால் உருவாகும் சூழலில் வரதரை அவ்விருவரும் இணைந்து பயன்படுத்த வேண்டியதுதான்.
அப்படி டக்ளஸ்சும் சுரேஷ்ம் இச்சூழலை ஏற்படுத்துவார்களாயின் குகன் ஜேம்ஸ்பாண்ட் மற்ற மிச்சமாகி இன்று இருக்கக்டிய EPRLF இன் முக்கிய ஆளுமையுள்ள தோழர்களும் வரதரைப் போலவே இந்த இணக்கச் சூழலுக்குள் தன்னியல்பாகவே இணைந்து கொள்வார்கள்.
குகன் ஜேம்ஸ்பாண்டு.., இவன் Nadarajah Kamalaharan ஒரு கல்விப்புல மேட்டுக்குடி; அவனொரு சல்லிப்பயல்; அவன் தன்ரைப் புத்தியை காட்டுவதற்காக இந்தச் சித்து விளையாட்டை விளையயாடி இருக்கிறான். ஆனால், இவன் பேமாளி நிக்சன் சிந்திக்க மாட்டானென நினைத்திருக்கிறான் பாரு குகன் ஜேம்ஸ்பாண்ட்; நீயே சொல்லு நிக்சனா கொக்காவா..?
இப்ப பாரு குகன் ஜேம்ஸ்பாண்ட்…, டக்ளஸ்சும் சுரேஷ்ம் நாபாவோட இருந்தவர்களென நாம நினைக்கிறதாக இருந்தால் தோழர்களாக இருக்கக்கூடிய சுரேஷ்ம் டக்ளஸ்சும் “என்னடா மச்சான் இதொரு யுசுப்பி மேட்டர்; இதையெல்லாத்தையும் மனசில வச்சுக்காதே” என்று சொல்லி கை கொடுத்து குலுக்கிக் கொண்டு மக்களுக்கு இல்லையென்றாலும் நாபாவை நம்பி வந்தத் தோழர்களுக்கு நாமதானே எல்லாமே என்றும் அதுவும் தங்கடை கடமையென்று அப்பா ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தியிருக்க வேண்டுமெல்லோவென்று நொந்து தானாகவே இணைந்து செயல்படத் தொடங்குகிற மனநிலைக்கு வந்திருக்க வேண்டுமல்லவா?
நாபாவைப் புலிகள் படுகொலை செய்த பின் எம்மைக் கடந்துபோன 35 வருடங்களில் இது நடக்கேலையென்பது பெரும் கேள்வியென குகன் ஜேம்ஸ்பாண்ட் நீ யோசிக்கிறது எனக்கு விளங்குது. ஆனால், அந்த மரமண்டை Nadarajah Kamalaharan க்கு விளங்கியிருக்குமாவென்றுதான் எனக்குள் பெரும் கேள்வி.
நானொரு புகைப்படத்தை அடிக்கடி முகநூலில் பார்ப்பேன்; அப்பொழுது அதற்கான அர்த்தம் எனக்குப் புலப்படவில்லை. ஆனால், Nadarajah Kamalaharan இன் கேள்விக்குப்பின்தான் தெளிவாகத் தெரிந்தது.
வேறொன்றுமில்லை; அதுதான் எனக்குள் சேதியொன்றைச் சொன்னது; டக்ளஸ்சுக்கும் சுரேஷ்க்கும் இடையில் இணக்கம் ஏற்படுவதற்கான எந்தவொரு வாய்ப்பும் வரும் வரலாற்றுப் பக்கத்தில் இல்லையென்பதாகும்.
அந்தப் புகைப்படமென்பது நாபாவும் டக்ளஸ்சும் ஒன்னாக இருக்கிறதுதான். அதில் என்ன விசேஷமென்றா குகன் ஜேம்ஸ்பாண்ட் கேட்கிறாய்?
அப்புகைப்படத்தில் டக்ளஸ் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார் குகன் ஜேம்ஸ்பாண்ட்.
“இதென்ன…, இதிலென்ன தப்பு…” என்று நீ கேட்கிறாய் ஜேம்ஸ்பாண்ட்?
அது வந்து ஜேம்ஸ்பாண்ட்…, அந்த இடத்தில் தன் அதிகாரத்தை நிலை நாட்டுவதென்பதற்கான அடையாளமாகவே யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி மேலாதிக்கச் சிந்தனை வரையறுத்திருக்கிறது. அதைத்தான் அதில் டக்ளஸ் காட்சிப்படுத்துகிறார்.
அப்புகைப்படத்தை மீண்டும் மீண்டும் சமூகப்பொதுப்புத்திக்குக் காட்சிப்படுத்தி டக்கிஸ்ட்டுகளும் நாபாவென்ன…, பிரபாகரனுக்குப் பின்னாடி ஈழத்தமிழர்களின் ஏக தலைமை டக்ளஸ்தானென்பதைச் சொல்லிப் பொம்மைகளாக டக்ளஸ் கொடுத்த கீக்கு கை தட்டி மகிழ்கிறார்கள்.
ஆகவே, Nadarajah Kamalaharan நீங்கள் அவ்விருவர்களையும் முதலில் கட்சிப்பொறுப்பில் இருந்து வெளியேறச் சொல்லுங்கள்.
அது நடக்குமாயின் நீங்கள் எதிர்பார்க்கிற EPRLF இன் ஆளுமை தோழர்களை ஒன்றிணைக்கிற வேலையை அது இலகுவாக்கும்.
ஆனால், Nadarajah Kamalaharan நீங்களும் சாத்தியமில்லாதைச் சொல்லி எங்களைப் பொதுவெளியில் நாறடிக்க முற்பட்டதால்தான் நானும் சாத்தியமாகாத விசயத்தைச் சொல்லி உங்களை வெறுப்பேத்தி இப்பதிவை முடிக்கிறேன்.
– Nixson / Dec 24, 2025
