ஜனநாயகக்குஞ்சுகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் எங்கே தோற்றுப் போகிறார்கள்?

அண்மையில் வட்டுக்கோட்டை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டொக்டர் அர்ச்சுனாவும் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பேசிக்கொண்ட விதம் பற்றிப் பொதுவெளியில் பொதுப்புத்திக் கதையாடலில் டொக்டர் அர்ச்சுனா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார்.

டொக்டர் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்குத் தெரிவான காலம் தொட்டு பையித்தியமெனச் சாடத் தொடங்குகிற குவி மையவாத தனிநபர் மைய ஏகத்தலைமைகளும் அதன் ஆதரவு தளமும் மீண்டும் குற்றப்பத்திரிகையை அவருக்கெதிராக சமர்ப்பிக்கிறது.

இந்நிலைக்காகக் கவலைப்படுவோரை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். ஏனென்றால், இவர்களும் யாழ்ப்பாணியத்தின் கெளரவம், மானம், கல்விச்சமூக பண்பியல், சட்டத்தரணிகள் பாராளுமன்ற போகிறது என்கிற யாழ் மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி தூய்மைவாதம் காலியாக்கப்படுகிறதாகக் கவலைப்படுகிறார்கள்.

இந்த யாழ்ப்பாணிய சமூகம் என்றைக்குமே வாய் திறந்ததுமில்லை; திருந்தியதுமில்லை. மாறாக, அதிகாரத்திற்கு வருவோர் மட்டுமே இது பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்; கவலைப்படுகிறார்கள். ஏனென்றால், இதுதான் இவர்களுக்கான அரசியல் ஆகும்.

வெறுமனே டொக்டர் அர்ச்சுனாவில் அந்நியன் உள்ளே புகுந்தது கிடையாது. அதற்கொரு பாராளுமன்ற உறுப்பினன் என்கிற முருங்கைமரம் இருந்தது.

யாழ்ப்பாணிய மாவட்டத்தில் 5 இலட்சத்திற்கு மேலே உள்ள வாக்காளர்களுக்குள் ஒரு 30 ஆயிரம் வாக்குகளை எடுக்க முடியாமல் தொண்டை தண்ணி வத்திய சூழலில் யாழ்ப்பாணிய System political இல் குவி மையவாத தனிநபர் மைய ஏகத்தலைமைகள் இருந்தது.

குவி மையவாத தனிநபர் மைய ஏகத்தலைமை என்பது யாழ்ப்பாணிய System political இல் G.G.பொன்னம்பலம், சா.ஜே.செல்வநாயகம், அல்பிரட் துரையப்பா, சண்முகநாதன், அமீர்தலிங்கம் என மிதவாத அரசியலில் இருந்து தீவிரவாத சூழலில் பிரபாகரனோடு நின்றுவிடவில்லை.

சுமத்திரன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சந்திரகுமார், செல்வம், சித்தார்த்தன், சுரேஷ், டக்ளஸ் எனத் தொடர்கிறது.

இதில் டொக்டர் அர்ச்சுனாவும் இணைகிறார். அவ்வளவுதான்.

ஒரு காபினெட் அமைச்சர், தன்னை நோக்கிக் கேள்வி கேட்டவர் நோக்கி பொதுவெளி பொங்கியெழுதல் செய்ய முடிகிற பொழுதும் யாழ்ப்பாணியச் சமூகம் மெளனமாகக் கடந்து போகிற பொழுதும் அரசியல் பேசுபவர்களும் மெளனமாகக் கடக்கிற பொழுதும் அடுத்து என்ன நடக்கும்?

இப்பொழுது யாழ்ப்பாணிய System political இல் தொடர்ந்து குறைந்தபட்சம் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் பார்ப்போமானாலும் ஒரு வெற்றிடம் இருந்து வந்திருக்கிறது.

இந்த வெற்றிடத்தை நிரப்புவதென்பதுதான் புதிய அரசியலாக இருக்கிறது. ஆனால், அப்படியான புதிய தலைமை உருவாகவில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.

2009 இல் பிரபாகரனும் புலிகளும் இல்லாத 16 வருடங்களில் இவ்வெற்றிடத்தில் அப்படி புதிய யாழ்ப்பாணிய System political இலிருந்து மாறுபட்ட சிந்தனை சித்தாந்தம், கட்சி அமைப்பு முறையில் மாற்றம் கொண்ட தலைமை எதுவும் நிரப்பவில்லை; இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான சூழலை 2009 இற்குப்பின் யாழ்ப்பாணிய System political இல் மீதமிருந்த இருந்த குவி மையவாத தனிநபர் மைய ஏகத்தலைமைச் சூழல் அனுமதிக்கவில்லை.

யாழ்ப்பாணிய System political என்பது தங்களைப்போலவே ஒன்றையே அனுமதித்தது; அதுவும், தனக்கான எதிரியாகவே அனுமதித்தது.

இந்த யாழ்ப்பாணிய System political இல் எதிர் நிலையில் வலிந்து நிறுத்தப்படுகிற குவி மையவாத தனிநபர் மைய ஏகத்தலைமையின் நடைமுறை அரசியல் எவ்வாறு இருக்கும்; இவ்வாறுதானே இருக்கும்?

இப்போக்கில் மீண்டும் இந்த வெற்றிடம் யாழ்ப்பாணிய System political இலில் மீண்டும் உருவாகி இருக்கிறது.

குறைந்தபட்சம் 2029 இல் நடக்க இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் யார் நிறுத்தப்படுகிறார்கள் என்பது மிக முக்கியம்.

அதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அப்போட்டி மைதானத்தில் பங்கேற்க யார் இருக்கிறார்கள் என்பது வாக்காளர்களுக்கு மிக முக்கியமாகிறது.

அப்படிப் பார்க்கையில் இனிவரும் இரண்டு வருடத்தில் இப்போட்டியில் பங்கேற்க யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறவர்களுக்குள் டொக்டர் அர்ச்சுனாவும் உண்டென்பதை நாம் மறந்து விடக்கூடாது.

யாழ்ப்பாணிய System political மாவட்டத்தில் 2020 இல் தமிழரசு கட்சியும் 2024 இல் NPP யும் பெருபான்மை பெற்றிருக்கிறார்கள். ஆனால், 2029 இலிலும் பெருபான்மை என்பது 3 ஆசனத்தைப் பெறுவதாக இருக்குமென்பதை நாம் இலகுவாக தீர்மானித்து விடமுடிகிறது.

அச்சூழலில் மிகுதி 3 பாராளுமன்றங்களை யார் யாரெல்லாம் பெறுவார்கள் என்பதையும் நாம் தீர்மானிக்கத் தயாராக வேண்டும். ஏனென்றால், வாக்காளர்களைச் சிந்திக்க வைக்கிறதிற்கு இதைவிட வேறு வழி எம்மிடம் கிடையாது. அதுவும், பொது மையத்தில் நின்று சொல்வதாக வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டியிருகிறது.

சரி பிழைக்கு அப்பால் தமிழ்த்தேசியவாதம், இனம், மண் மீட்பு என்கிறதிற்கொரு மவுசு யாழ்ப்பாணிய System political இல் உண்டென்பதை மனுத்து விடமுடியாது.

பெருபான்மைக்கான போட்டிக்குள் NPP யும் தமிழரசு கட்சியும் ஏற்கனவே இருப்பதாக மாயைத் தோற்றப்பாடு கட்டமைக்கப்படுகிறது.

இது எதற்கென்பது புரிதலுக்குரிய விசயமாகும். அப்புரிதல் இல்லாமல் இப்போட்டிக்குள் கலந்து கொள்வது முதல் அடியிலே மூஞ்சை குப்புற வீழ்ந்து மூக்கு உடைந்துக் கொள்வதாகவே அமையும்.

இந்த 3 வது போட்டியாளராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வருகிறார்.

அதற்கான அரசியலைத்தான் அவர் முன்னெடுக்கிறார் என்பது போட்டியாளர் எல்லார்க்கும் தெரியும். குறிப்பாக, NPP மற்றும் தமிழரசு கட்சிக்கும் தெரிந்திருக்கிறது.

இப்போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம் இல்லையென்றாலும் மூன்றாவது இடம் நிச்சயம் என்பதை தனதாக்கிக் கொள்ள முடியுமென அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கஜேந்திரகுமார் நம்புகிறார். அது சாத்தியப்படவும் வாய்ப்புண்டு.

கிட்டத்தட்ட முதலாமிடம் நேரிடையாக வாக்குகளின் அடிப்படையில் இரண்டும் கூடுதல் வாக்குகளை மாவட்ட ரீதியில் பெற்றுக் கொண்டதற்கான போனஸ் ஆசனமாக ஒன்றையும் சேர்த்து மூன்றைப் பெறுவார்கள்.

இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் தலா ஒவ்வொன்றாகப்பெற மிகுதி ஒன்றை யார் பெறுவார்கள் என்பதே பெரிய கேள்வி?

முதல் இடத்திற்கான வாக்காளனின் தீர்மானத்தில் கூட்டணி பெரும் தாக்கத்தைச் செலுத்தினாலும் குறிப்பாக, திரும்பவும் TNA கூட்டணி மீண்டும் பலம் பெறுவதில் 2020 இலில் இதர கட்சிகள் பாராளுமன்ற வாய்ப்பைப் பெற்ற மாதிரி 2029 இலிலும் வாய்ப்புண்டு. ஆனால், அதை 100% வீதமாகச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், NPP தான் அதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறதென்பதை மறந்து விடமுடியாது.

2024 இலின் பாராளுமன்ற முடிவைத்தான் திரும்பவும் கொண்டுள்ளதில் 90 % வீதம் கண்டடைய முடிகிறது.

சித்தார்த்தன், சுரேஷ்(DTNA), மணிவண்ணன் (சி.வி.விக்கினேஸ்வரன்), தவராசா (ஜனநாயக தமிழரசு கட்சி), சந்திரகுமார் (சமத்துவ கட்சி) என்போரின் முடிவில் உறுதியான முடிவை எடுக்க முடியாதிருக்கிறது. ஏனென்றால், இவர்களது முடிவென்பது தேர்தல் அறிவித்து கூட்டணி பேரமெல்லாம் முடிந்து வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்கும் காலம் வரைக்கும் ஊசலாட்டமாகவே இருக்கும்.

தேர்தலுக்கும் இவர்களின் இறுதி முடிவுக்குமான காலம் குறையக் குறைய தேர்தலில் இவர்களின் பங்கு எதிர்மறை விளைவாகவே மாறிக்கொண்டிருக்கும். இவர்கள் தனித்துப்போட்டியிடுவதை யாழ்ப்பாணிய System political வாக்காளன் விரும்பவில்லை.

டொக்டர் அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ், முன்னாள் MP அங்கையன், அருண் சித்தார்த் இவர்களோடு சில நேரம் முன்னாள் அமைச்சர் விஜயகலா போட்டிக்குள் வரலாம். ஆனால், மிகுதியாக இருக்கிறது ஒரேயொரு ஆசனம் மட்டுமே என்பதே கவனம் கொள்ளப்பட வேண்டும்.

மீண்டும் டொக்டர் அர்ச்சுனாவைப் பாராளுமன்றம் செல்ல விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய போட்டியாளர்கள் இவர்களாகவே  புதிய சரியான வரவு வராமல் இருக்கும் வரைக்கும் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணிய System political வாக்காளனின் மனநிலையை வைத்துப் பார்க்கிற பொழுது மீண்டும் 30 ஆயிரம் வாக்குகளைத் தொட்டுவிட டொக்டர் அர்ச்சுனாவுக்கே உண்டென்பது என் அவதானிப்பாகும்.

யாழ்ப்பாணிய System political இலின் குவி மையவாத தனிநபர் மைய ஏகத்தலைமை சித்தாந்தத்தில் இதைவிட வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது.
                                  – Nixson / June 19, 2026