எழுத்துகள்

  • தரிசு நிலங்களாக மாறும் ஈழ அரசியல்…?

    போதிமரத்தின் கீழ்…, இதை யார் சொல்றதென்கிற விவஸ்தையேதுமின்றி புலிகளின் நிழலில் சாமர்த்தியமாக பெரிய மனுசர்களானவர்கள் போதிமரமென்கிற NPP இன் தயவில் நாம் புதிதாக ஞானம் பெற்று விட்டதாகச் சொல்கிறதென்பது வெள்ளைக்காரனுக்குக் கணக்குப் பாடமெடுத்த அடங்காத்தமிழன் மரபுச் சில்வண்டு சாத்தானை இழுத்து நடு ரோட்டில் விட்டிருக்குது; அதுக்கு சாத்தானின் வேதம் எப்படி என்பதைப் புரிய வைக்க வேண்டாமோ? இரண்டு photos சொல்லும் கட்சித் தலைவர்களின் இன்றைய அதிகார நிலையையும் அதனூடாக வரலாற்று திசை வழி நிகழ்வுகளின் மீதான முடிவுகளின்…


  • இன்றைய தலைமை வெற்றிடத்திற்கு நாங்கள் முன்னிறுத்தும் அரசியல் குறியீடு…!

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.          – திருக்குறள் நான் மேட்டருக்குள்ளே போகிறதிற்கு முன் ஒரு விசயத்தைச் சொல்லி விடுவது சரியாக இருக்குமென நம்புகிறேன். ஏனென்றால், நான் பேசப் போகிற மேட்டரென்பது மாகாண சபையைச் சார்ந்தது. 2023 இல் நான் தமிழகத்திற்கு குடும்பத்தோடு பயணம் மேற்கொண்ட பொழுது Arulbert Julian இன் ஒழுங்கமைவில் கோயம்புத்தூரில் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜ பெருமாளைச் சந்தித்திருந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இச்சந்திப்பு மிக முக்கியமானதாகத்தான் இருந்தது. அது…


  • அடங்காத்தமிழனின் அரசியல் பொட்டுக்கேடுகள்….!

    அடக்காதே…, அடக்காதே…, தமிழர்களை அடக்காதே…! வைக்காதே…, வைக்காதே…, தமிழர்களின் இடங்களில் சிலை வைக்காதே…! அரசே உமது நீதி எங்கே…? திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்திற்குப் பின் ‘Dhani Thursi’ எனும் முகநூல் முகவரியைக் கொண்ட Reels ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதில் போராட்டக்காரர்களின் கோஷக்குரலாக ஒலிக்கிறது. அது கடற்கரையையொட்டிய சாலையொன்றில் பெருந்திரளான போராட்டக்காரர்கள், தங்கள் திரட்சியின் மையப்பகுதியில் தங்களது தோள்களில் மத அடையாளத்திற்கான தெய்வமொன்றைச் சுமந்து கொண்டு வருகிறார்கள். அது சிவனாக இருக்குமென ZOOM பண்ணிப் பார்க்கிற…


  • கரை சேராத கடல் பயணம்…!

    ‘நான் காற்று வாங்கப் போனேன்…ஒரு கவிதை வாங்கி வந்தேன்….அதைக் கேட்டு வாங்கிப் போனாள்..அந்தக் கன்னி என்ன ஆனாள்…’ என்கிற கண்ணதாசனின் சினிமாப் பாடல் ஞாபகம் வந்தது. அந்த ஞாபகம் வருவதற்கு ஏது மூல காரணமாக எனக்கிருந்ததென்கிற ஒரு கேள்வி உங்களுக்குள் இருந்து எழுமல்லவா? அது வேறொன்றுமில்லை; இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானம் மீதான .இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கொடுக்கப்பட்ட முறைபாட்டின் நிமித்தம் முறைப்பாட்டாளருக்கு அழைப்பு ஆணைக்குழுவால் அனுப்பட்டு Nov 12, 2025 இல்…


  • ஊமைக்குரல் – 3

    வயலில் புழுதி நெல் விதைப்புத் தொடங்கி விட்டதாக அவன் சொல்லியிருந்தான். அவனுக்கு WhatsApp இல் உரையாட நேரமில்லாமல் இருந்தது. அன்டைக்கு அவனும் புழுதி விதைப்பு முடிந்து மருந்து தெளிக்க வயலுக்குப் போயும் வேலையும் தொடங்கிவிட்டிருந்தான். ஆனால், பொழுது மதியத்தைக் கடந்து விட்டிருந்த பொழுது மழை வந்து மருந்து தெளிக்கிற வேலையைக் கெடுத்து விட்டது. ஏளியாக வீட்டுக்குத் திரும்பியிருந்தவன் Whats App இல் தொடர்பை எடுத்திருந்தான். சதாவோடு கதைத்து போட்டு அப்பத்தான் போனை வைச்சிருந்தேன். அப்பத்தான் அவனின் அழைப்பு,…


  • ஈழ அரசியலில் ஒரு கட்டுடைப்பு சோலை…!

    சோலையூரான்…., இவனைப் பத்திப் பேசுகிறதிற்கு என்ன இருக்கிறது என்போர் பல பேர் இருக்க…, இன்டைக்கு ஈழ அரசியலில் ஒரு கட்டுடைப்பு அவசியம் என்போர் கட்டாயம் அவரைப் பேச வேண்டுமெனச் சொல்வதைக் காணலாம். ஒரு நாள் EROS கிருபாவோட…, அதுதான் ஈழ அரசியலில் இடதுசாரிய ஆயுதப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களில் அது சேதிலமைடைந்து தமிழ்த்தேசியத்தோடு கரைந்து சாக்கடையாகத் தேங்கிய பொழுதும் தன் இடதுசாரிய சித்தாந்தத்தின் மீதான பற்றுதலிலும் நம்பிக்கையிலும் தொடர்ந்து அதில் பயணிப்பதற்காக முன்னிலை சோசலிசக் கட்சியோடு…


  • நோயல் நடேசனும் கிட்லரும் என்ன சொன்னார்கள்?

    நீதியின் குரல் அரசியல் செல்ல வேண்டும் என்பது கேட்பதற்கு சர்க்கரை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையென இனிமையாக இருக்கும்; நல்லாவும் இருக்கும். அதைவிட நீதி, தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளத் தேர்வு செய்கிற வாகனம் எதுவென்பது முக்கியமல்லவா? “நாங்கள் வீரத்தில் எப்பொழுதும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எப்பொழுதும் எங்களுடைய மண் காட்டிக் கொடுத்தது.” மேடையில் மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் குரல் ஒலிக்கிறது. அரங்கத்தில் கை தட்டலும் வீசில் அடித்தலும் ஆக்ரோஷத்தையும் ஆர்பரிப்பையும் ஏற்படுத்துகிறது. காணொளி தொடங்குகிறது. மாகாண சபைக்கான…


  • ஊமைக்குரல் – 2

    கதாபாத்திரங்களும் சம்பவங்களும், உரையாடலும் உண்மையோடு ஒத்துப் போவதாகக் கருதினால் அதற்கு அவர்களே பொறுப்பு; ஏனென்றால், என் சூழல் தாண்டி…, என் புலன்களுக்கு எட்டுப்படாத சூழலில், உங்களுக்கு அருகாமையில் என் சுய கற்பனையோடு இணைந்த சம்பவங்களோ, நிகழ்வுகளோ நடந்திருக்கலாம்; நான் மறுப்பதற்கில்லை; ஆனால், அவைகள் உங்களுக்குள்ளிருந்தும் மேலெழலாம்; அது எதார்த்தமானதுதான்; ஆனால், அதற்கு நான் பொறுப்பல்ல; இது என் சுய கற்பனையே…! 80 களில் சமூக ரீதியான, பிரதேச ரீதியான, வர்க்க ரீதியான ஏற்றத்தாழ்வுகள், அன்றைய இளையதலைமுறையினர்களுக்குள் நீர்த்துப்…


  • ஊமைக்குரல் – 1

    முன்னுரை ‘பட்டாம்பூச்சி’ நாவலை 2001 ஆம் ஆண்டில் வாசிக்கிற பொழுதுதான் எனக்குள், என் இயக்க வாழ்வியலை நாவலாக எழுத வேண்டுமென்கிற எண்ணம் உருக்கொண்டது. ஆனால், அந்த எண்ணத்தோடு பயமும் கூடவே தோன்றி பயணிக்கத் தொடங்கியது. அப்படித்தான் என் இயக்க வாழ்வியல் இருக்கிறது. நான் சொல்லப் போகும் நிகழ்வுகள் பல பேருடைய முகமூடிகளை கிழிக்கலாம் அல்லது அவர்கள், தங்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்தி விட்டேனென்றும், தம் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விட்டேனென்று கோபப்படுவதற்கான சந்தர்ப்பங்களை நானே வலிந்து கொடுப்பதாக இருக்கிறது. ஏனென்றால்,…


  • நிராசையாகும் ஒடுக்கப்படும் மக்களின் அதிகாரக்கனவு…?

    “…ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எங்களை அனுசரிப்பவர்…” என்கிற சொற்களின் இரயில் வண்டித் தொடரைக் கடக்கிற பொழுது ‘அப்பா’ என்பது அழுத்தமாகச் சொல்லப்படுவதாக உணர்ந்தேன். என் உள்ளூணர்வு ஏதொன்றை நினைவுக்குள் இருந்து புதிய அரசியல் உரையாடலுக்காக வெளித்தள்ள முயன்று கொண்டிருந்தது. என் மூளை, என் நினைவடுக்கில் இருந்து இந்த ‘அப்பா’ எனும் சொல்லின் அரசியல் பயன்பாடு பற்றிய செய்திகளைத் தொகுப்பாக்குவதற்காக படு வேகமாகத் தொழில்ப்பட தொடங்கியது. இந்த ‘அப்பா’ என்கிற சொல்லுக்கும் ‘ஐயா’ என்கிற சொல்லுக்கும் இருக்கிற…


  • யாழ்மையவாத அரசியல்வாதியின் புறம்போக்குத்தனம்….! பிற்போக்குத்தனம்…!

    ‘நாதாதாரி’; இப்படித்தான் என்னால் இவரைச் சொல்ல முடிகிறது. ஏனென்றால், தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் மனித வலுக்களையும் தன் குருட்டுப் புத்தியில் தானென்ற யாழ்மையவாத வெள்ளாளிய மேட்டுக்குடி சிந்தனையின் ஆகங்காரம், தலைக்கணத்தில் நாசமாக்கிப்போட்டு நாதியற்ற தனிநபராக,  லோ…, லோவென்று அலையிறதைப் பார்க்கிற தருணத்தில் அதைவிட வேறொன்றும் என்னால் கண்டடைய முடியவில்லை. இடதுசாரியென்றோ, EROSக்காரனென்றோ, EPRLF யை பத்மநாபாவோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, விழிம்புநிலை மக்களுக்காக, கைவிடப்பட்டு நாதியற்று நலிவடைந்த மக்களுக்காக, சாதீய வர்க்க ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடங்கிய…


  • புலிகள் எதிர்ப்பு அரசியலின் தலைமைத்துவம் யாரிடம்…..?

    ‘தேசம் திரை’ இல் முல்லை மதியின் உரையாடல் காணொளி, வைரலாக முகநூலில் விசிறப்பட்டுக் கொண்டிருக்கிறது. WhatsApp இலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பகிர்தலைச் செய்வதற்கு யார் அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்பது மிக முக்கியமானதாக, நான் கருதுகிறேன். ஏனென்றால், அவர்களுக்காகவே, முல்லை மதியும் தன் உரையாடலைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். யாழ் மையவாத அதிகார மேலாதிக்க சிந்தனையின் மன நிலை கொண்டவர்களிடத்தில் இரு விடயங்களுக்காக ஒரு விசயத்தைச் செய்வதென்பது எதார்த்தனமான போக்காகும். இதை பிரதிபலிக்கும் முகமாக, ‘ மலையை…


  • தமிழ் மாற்று அரசியல் பேசும் சுழலொன்றைக் கண்டேன்…!

    NPPயையோ, அநுராவையோ தமிழ் மாற்று அரசியல் பரப்புக்குள் காத்திரமான அறிமுகமொன்றைக் கொடுத்ததென்பது ‘நாங்கள்’ என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது சாத்தியமானதென்பதில் 1000 பூக்கள், நம்மொழி என்கிற அரசியல் உரையாடல் தளங்களின் கூட்டுழைப்பு இருந்ததென்பதில் இதில் பங்கு கொண்ட நாம் அனைத்துப் பேரும் கடல் அலைபோல ஆர்பரிக்க முடியும். NPP மற்றும் அநுராவின் அரசியல் பற்றி தமிழ் அரசியல் பரப்புக்குள் எங்கேயோ ஒரு புள்ளியில் அரகலிய போராட்டத்திற்கு முன்னாடி 2019 இல் எம்மால் குறித்து பேசப்பட்டிருந்தது. NPP…


  • கைவிட்டுப்போன கதையாடல்களும் சிந்தனைகளுமென போருக்குப் பிந்திய தமிழ்ச்சமூகம்…!

    கிழக்கின் தென்கோடி கிராமங்களில் சிலவற்றுக்கு குறிப்பாக அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு, தம்புவில், பொத்துவில் ஆகிய ஊர்களுக்குச் சென்றிருந்தேன். அலுத்து சலித்துப்போன மனிதர்களைக் காண்பதென்பது வாழ்க்கையில் சாதாரணமானதாக இருப்பதைச் சரியென வலியுறுத்துவதையே இக்கிராம வாழ்வியல் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. போருக்குப்பிந்திய வாழ்வியலென்பதில் அக்கறை கொண்டு, அது எப்படி திருத்திச் சீர்செய்து மறுசீரமைப்புக்க்குள் கொண்டு வந்திருக்க வேண்டுமென்பதில் ஒரிரு குரல்கள் தனித்துவமாக எழுந்திருந்தாலும் பொதுப்படையில் அறிவியல் தொழில்நுட்ப பின்னணியில் எந்த வாழ்வியல் சிந்தனையும் அதற்குள் இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை. கஷ்டப்படுகிறவனை…


  • கல்முனை வடக்கு பிரதேச தொடருமொரு  உளவியல் அரசியல்…!

    மதியம் (Augu 26, 2025) 12 மணி, வீட்டின் முன் போர்டிகோவின் கீழ் கொஞ்சம் சாய்ந்ததாக இருக்கக்கூடிய பிளாஸ்டிக் கதிரையில், கதிரையின் சாய்வுக்கேற்ப சாய்ந்து படுத்த நிலையில் உட்கார்ந்திருந்தேன். போர்டிகோவை மேலால் மேவி, பக்கத்தில் நின்ற மாமரம் தன் கிளைகளைப் பரப்பி, தன் செழுமையை வெளிப்படுத்தி வளர்ந்திருந்தது. வெளியில் சூரியன் சுட்டெரித்தாலும் மெலிதாகத் தாலாட்டும் கணக்கில் காற்றும் தொட்டு மேவிக் கடந்து செல்கிற பொழுது வெக்கையை உத்தித் தள்ளிச் சென்று விடுகிறது. அந்தத் தென்றலின் தாலாட்டில் மெய்மறந்த…